• Sep 20 2024

ராதாவைக் கட்டி வைத்து அடிக்கும் பரமு... காணாமல் தேடும் வெற்றி... இனி நிகழப்போவது என்ன..? பரபரப்பான 'Thendral Vanthu Ennai Thodum' Promo..!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தென்றல் வந்து என்னைத் தொடும். அதிரடித் திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கும் இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கவுள்ளது என்பது குறித்த ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி இருக்கின்றது.


அதில் வெற்றியைப் பார்க்க வந்த பாரதி "அண்ணா ராதா என்ன சொன்னா" எனக் கேட்கின்றார். பதிலுக்கு வெற்றி "அவ எங்க என்னைப் பார்க்க வந்தா, அவளுக்குத்தான் என்னைப் பார்த்தாலே பத்திக்கிட்டு வருமே" என்கிறார்.


அதற்கு பாரதி "அப்போ ராதா வந்து உன்னைப் பார்க்கவே இல்லையா..? ராதா நேற்று சொன்னாள் எனக்கு மனசு சரியில்லை, நா வெற்றியைப் பார்க்கப் போறேன்னு, ஆனால் அவர் ஒண்ணு மட்டும் தெளிவாக சொன்னா அண்ணா நீ ரொம்ப நல்லவன் என்று" என்கிறார்.


இதனையடுத்து அப்புறம் எதுக்கு ராதா என்னைப் பார்க்கல, என்னவாக இருக்கும் என வெற்றி யோசிக்கின்றார்.  மறுபுறம் ராதாவைக் கட்டிப் போட்டு பரமு கும்பல் அடித்து சித்திரவதை செய்கின்றனர். மேலும் ராதா வீட்டிற்குச் சென்ற வெற்றியின் ஆட்கள் ராதா வீடு பூட்டி இருப்பதாக சொல்கின்றனர். இதனையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement