• Sep 20 2024

சூர்யாவின் 41வது படத்தின் டைட்டில் வெளியானது..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நேருக்கு நேர் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்வருகின்றார் நடிகர் சூர்யா.

இவர் நடிப்பில் அண்மை காலங்களில் வெளியாகிய சூரரை போற்று, ஜெய் பீம் மற்றும் எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்கள் பெரும் வெற்றியை குவித்து வருகின்றது.

இந்நிலையில் நடிகர் சூர்யா 15 ஆண்டுகளுக்குப் பின்பு இயக்குநர் பாலாவுடன் இணைந்துள்ளார். ஆரம்பகாலங்களில் இயக்குநர் பாலா சூர்யாவை வைத்து ‘பிதாமகன்’, ‘நந்தா’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். அந்தவகையில் சூர்யா நடிக்கும் 41 வது படம் ,சூர்யா 41 என தற்காலிகமாக அழைக்கப்படும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்துவருகின்றது.

சூர்யா 41 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் முடிவடைந்த நிலையில் தொடர்ந்து மதுரையில் படப்பிடிப்பை நடத்தவுள்ளனர். அதன் பின் அடுத்தகட்ட ஷூட்டிங்கை தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் சூர்யா 2 வேடங்களில் நடிப்பதாகவும் அதில் ஒன்று காது கேட்காத வாய் பேச முடியாத கதாபாத்திரம் என ஒரு வதந்தியும் தற்போது பரவிவருகின்றது.

இந்நிலையில் இன்று இயக்குநர் பாலாவின் பிறந்தநாள் என்பதால் அவருக்கு பிறந்தநாள் ட்ரீட்டாக இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு இருக்கின்றனர்.

வணங்கான் என இந்த படத்திற்கு பெயர் சூட்டி இருக்கிறார்கள். சூர்யா மீனவராக நடிக்கிறார் என்பது போஸ்ட்டரை பார்க்கும் போதே தெரிகிறது.

பிற செய்திகள்

Advertisement

Advertisement