தளபதி விஜய் 'வாரிசு' படத்தின் ரிலீஸ்க்கு பின்னர், அடுத்ததாக தான் நடிக்க உள்ள 67வது படத்தில் முழு கவனம் செலுத்தி வருகிறார். இப்படம் குறித்து அண்மையில், இந்த படத்தை தயாரித்து வரும் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம், அறிக்கை வெளியிட்டு தெரிவித்ததை தொடர்ந்து, அவ்வபோது இப்படம் குறித்த முக்கிய அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது.
அந்த வகையில், இந்த படத்தில் நடிக்க உள்ள பிரபலங்கள் குறித்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பு பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியானது. இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மன்சூர் அலிகான், மிஷ்கின், மேத்தியூஸ் தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்ஷன் கிங் அர்ஜுன், ஆகியோர் நடிப்பது உறுதியானது.
சில தினங்களுக்கு முன்பு தளபதி67 டீம் தனி விமானம் மூலமாக சென்னையில் இருந்து காஷ்மீருக்கு சென்றனர். அது மட்டுமின்றி படத்தில் நடிக்கும் மொத்த நடிகர் நடிகைகள் பற்றிய அறிவிப்பு வந்திருக்கிறது.
பிப்ரவரி மாதம் முதலில் இருந்தே தளபதி 67 அப்டேட் வர தொடங்கும் என லோகேஷ் கனகராஜ் முன்பே கூறி இருந்தார். அதன் படி தான் தற்போது அப்டேட் வந்துகொண்டிருக்கிறது.இந்நிலையில் நாளை தளபதி 67 படத்தின் உண்மையான டைட்டில் என்ன என்பது நாளை அறிவிக்கப்படும் என லோகேஷ் தெரிவித்து இருக்கிறார். நாளை மாலை 5 மணிக்கு டைட்டில் வெளியாக இருக்கிறது. இதனால் ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!