• Nov 14 2024

சூப்பர் சிங்கர் பென்னி தயாளுக்கு நேர்ந்த சோகம்.. உடனடியாக நிறுத்தப்பட்ட நிகழ்ச்சி.. கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபலமான பாடகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் பென்னி தயாள். இவர் விஜய், அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன், சிம்பு உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் சூப்பர்ஹிட் பாடல்களை பாடி அசத்தி இருக்கின்றார். அதுமட்டுமல்லாது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலும் பங்கேற்று வருகின்றார்.


இந்நிலையில் பாடகர் பென்னி தயாள்  பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவரது தலை மீது ட்ரோன் கேமரா மோதிய சம்பவம் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சென்னையில் உள்ள விஐடி கல்லூரியில் நடந்த இசை நிகழ்ச்சியில் பாடகர் பென்னி தயாள் பங்கேற்று பாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு பறந்து கொண்டிருந்த ​​​​ட்ரோன் கேமரா யாருமே எதிர்பாராத நேரத்தில் திடீரென அவரது தலையின் பின்புறத்தில் வந்து பலமாக மோதியது. 


இதனால் பலத்த காயம் ஏற்பட்ட பென்னி தயாள் உடனடியாக மேடையில் இருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டார். அதேசமயம் இசை நிகழ்ச்சியும் அத்தோடு நிறுத்தப்பட்டது. இதனிடையே தனது உடல்நலம் குறித்து  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பென்னி தயாள் உணர்ச்சிகரமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில் அவர் "கல்லூரியில் நடந்த சம்பவம் குறித்து விசாரித்த அனைவருக்கும் என்னுடைய நன்றி. ட்ரோனின் இறக்கை தனது தலையின் பின்புறத்தில் தாக்கியதாகவும், அதனை தடுக்க முயன்றப்போது இரண்டு விரல்களில் காயம் ஏற்பட்டதாகவும்" தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாது இதுபோன்ற நிகழ்வுகளில் தொழில்முறை ட்ரோன் ஆபரேட்டர்களை வேலைக்கு அமர்த்துமாறு நிகழ்ச்சி அமைப்பாளர்களிடம் கோரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார். மேலும் அனைத்து கலைஞர்களும் தங்களது ஒப்பந்தங்களில் ஒரு விதிமுறையை கட்டாயம் சேர்க்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.


அதாவது, ட்ரோன் கேமராக்கள் உங்களை நெருங்க முடியாததை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார். அதேபோல் நாங்கள் அனைவரும் கலைஞர்கள். மேடையில் ஏறிப் பாடுகிறோம். இது விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படம் அல்ல என்பதை நீங்கள் நினைத்துக் கொள்ளுங்கள். எனவே வழக்கமான ஏற்பாடுகளை மட்டும் செய்யுங்கள் எனவும் பென்னி தயாள் மிகவும் உருக்கமாக தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement