லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் தான் லியோ. இந்தத் திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. அண்மையில் இப்படத்தின் ஆடியோ லாஞ்ச் நடைபெறுவதாக இருந்தது. இருப்பினும் சில காரணங்களால் அது ரத்து செய்யப்பட்டது. இதன் பின்னர் நேற்றைய தினம் படத்தின் ட்ரெய்லர் வெளியானது.
ட்ரெய்லருக்கு ரசிகர்கள் அமோக வரவேற்பை கொடுத்திருக்கின்றனர். காஷ்மீரில் சீரியல் கில்லர் கதையை விஜய் சொல்லும்படி தொடங்கும் ட்ரெய்லர் கடைசியில் லியோ எண்ட்ரியுடன் முடிவடைகிறது. இதனைப் பார்த ரசிகர்கள் படத்தில் விஜய்க்கு டபுள் கெட்டப்பா இல்லை டபுள் ஆக்ஷனா என்ற கேள்வியை எழுப்பிவருகின்றனர்.
மேலும் படத்தில் கண்டிப்பாக ஏதோ ஒரு ட்விஸ்ட் இருப்பதும் உறுதியாகியிருக்கிறது. இது ஒருபுறம் இருக்க விஜய் இப்படத்தில் கெட்ட வார்த்தை பேசியிருப்பதும் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.இதனால் விஜய் பெண்களை இப்படி இழிவாக சொல்லலாமா என்று பலரும் தமது கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் அநியாயத்துக்கு வன்முறை காட்சிகள் இருக்கின்றன. லோகேஷ் கனகராஜ் எல்லாம் தகுதியே இல்லாத இயக்குநர் என்று காட்டமாக ஒருசிலர் விமர்சிக்கவும் செய்தனர். ஏற்கனவே நா ரெடிதான் பாடல் சர்ச்சையை சந்தித்த சூழலில் தற்போது ட்ரெய்லரும் சந்தித்திருக்கிறது. இந்த சூழலில் லியோ ட்ரெய்லர் தரமான சாதனையை படைத்துள்ளது.
அதாவது லியோ ட்ரெய்லர் வெளியாகி 24 மணி நேரத்துக்குள் 30 மில்லியன் பார்வைகளை யூடியூபில் கடந்திருக்கிறது. இது ஜெயிலர் படத்தின் ட்ரெய்லர் பெற்ற பார்வைகளைவிட அதிகம் என்பது முக்கியமாகும். இதனைப் பார்த்த ரசிகர்கள் இப்போதாவது விஜய்யின் மாஸை உணர்ந்துகொள்ளுங்கள். விஜய்தான் எப்போதும் தமிழ் சினிமாவில் நம்பர் 1 என்பது இதன் மூலம் உறுதியாகியிருப்பதாக கூறிவருகின்றனர்.
Listen News!