தேசிய விருது பெற்ற இயக்குநர் G.வசந்த பாலனின் அடுத்த படைப்பான அர்பன் பாய்ஸ் நிறுவனத்தின் ‘அநீதி’ திரைப்படம் ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகிறது.இந்த படத்தை ஷங்கர் தான் வழங்குகிறார். அதனால் அவர் ரசித்த படம் மிக நல்ல கதை என அனைவரும் சொல்லி வருகின்றனர்.
தெலுங்கு படத்தின் டைட்டில் பிளட் அண்டு சாக்லேட் என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில் இரண்டு மொழிகளிலும் ஒரே சமயத்தில் ஜூலை 21 அன்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமான முறையில் இத்திரைப்படம் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுருந்த நிலையில் டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து. ஆக்ரோஷமும் கோபமும் நிறைந்த வண்ணம் உள்ளது அதனால் அனைவரும் இதனை ரசித்து பார்த்து வருகின்றனர்.
அதனை போல புது வசந்த பாலன் என சொல்லப்பட்டும் வருகிறது..இந்த படத்தில், அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக சர்பட்டா பட நடிகை துஷரா விஜயன் நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைக்க, எட்வின் சாகே இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ரவிக்குமார் படத்தொகுப்பு செய்துள்ள இந்த திரைப்படம் திரில்லிங் சினிமாட்டிக் பயணமாக எடுக்கப்பட்டுள்ளது.டீஸர் கொடுத்த ரீச் காரணமாக படத்தின் ட்ரைலரை நாளை ரிலீஸ் செய்ய உள்ளனர்.
Listen News!