இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் டோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் டோனியும் இணைந்து 'தோனி எண்டர்டெயின்மெண்ட்' என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் உருவாகி வரும் திரைப்படம் தான் எல்ஜிஎம்.
இதில் ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக நடித்த வருகின்றார், லவ் டுடே படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த இவானா, நதியா மற்றும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு ஆகியோரும் இப்படத்தில் நடிக்கின்றார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. காமெடியாக உருவாகியுள்ள இந்த டிரைலரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!