• Sep 20 2024

ரத்தம் தெறி தெறிக்க வந்த 'ஜவான்' பட டிரைலர் வீடியோ... வெளியாகி ஒரு மணி நேரத்திற்குள் செய்த மாபெரும் சாதனை..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில்  தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவர் தான் அட்லி. இவர் விஜய்யை வைத்து இயக்கிய தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று திரைப்படங்களுமே சூப்பர் ஹிட் வெற்றியைப் பெற்றிருக்கின்றன. இவர் தற்பொழுது ஷாருக்கானை வைத்து ஜவான் என்னும் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார்.


இப்படத்தில் நடிகை நயன்தாரா, தீபிகா படுகோன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அத்தோடு இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார். இத் திரைப்படம்  வருகிற செப்டம்பர் 7-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படம் ரிலீஸாக இன்னும் ஒரு நாட்களே எஞ்சி உள்ளது.


இந்நிலையில் தற்போது இப்படத்தின் மிரட்டலான டிரைலரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அந்தவகையில் ஹிந்தியில் வெளியான இந்த டிரைலர் ஆனது வெளியாகி ஒரு மணி நேரத்திற்குள் 2மில்லியன் பார்வையாளர்களை கடந்து மாபெரும் சாதனை படைத்திருக்கின்றது. 


அதேபோன்று தமிழில் வெளியான டிரைலர் வீடியோவானது 700ஆயிரத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்று வருகின்றது. இவ்வாறாக டிரைலர் வீடியோவிற்கே ரசிகர்கள் இந்தளவு வரவேற்புக் கொடுத்துள்ளமை படக்குழுவினரை மகிழ்ச்சியின் உச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.


Advertisement

Advertisement