"கோபிநாத் சார் சொன்னது எனக்கு நன்கு புரிந்தது 'நீயா நானா' நிகழ்ச்சியில் கணவன் குறித்து இகழ்வாக பேசிய மனைவி இது குறித்த விளக்கத்தை பிரபல சேனல் ஒன்றிற்கு அளித்துள்ளார்.
விஜய் டிவியில் 15 ஆண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்ரி ஷோ தான் 'நீயா நானா'.விவாத நிகழ்ச்சியான இதில் அதிகமாக சம்பாதிக்கும் மனைவிகள் Vs குறைவாக சம்பாதிக்கும் கணவர்கள் குறித்த விவாத நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது கணவர் ஒருவர், தனது மகளின் பிராக்ரஸ் ரிப்போர்ட்டை பார்ப்பது பற்றியும், தனக்கு கல்வி பின்புலம் இல்லாததால் மகள் காணும் கனவை அடைய தான் பாடுபடுவேன் என்றும் உருக்கத்துடன் குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பான வீடியோக்கள், ஒட்டுமொத்த நெட்டிசன்களையும் கட்டிப் போட, தந்தை மகள் பாசம் தொடர்பான பாடல்களையும், உருக்கமான காட்சிகளுடன் இணைத்து வீடியோக்களாக வெளியிட்டு வந்தனர். இந்நிலையில், நீயா நானா நிகழ்ச்சி மூலம் அதிகம் வைரலான கணவன், மனைவி மற்றும் மகள் ஆகியோர் பிரபல சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளனர்.
அதில் மனைவியின் எதிர்மறையான கருத்துக்களை பற்றி கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த கணவர், "மற்றவர்கள் சொல்வது போல் ஒன்றும் என் மனைவி கிடையாது. நாங்கள் "Arrange Marriage" தான் செய்து கொண்டோம். ஆனால், பார்க்கும் அனைவரும் நாங்கள் காதல் திருமணம் செய்து கொண்டதாக கருதுவார்கள். ஏனென்றால், அந்த அளவுக்கு நாங்கள் ஜாலியாக இருப்போம். யாரவது கேட்டால் கூட, ஆமாம் காதல் திருமணம் என்றும் கூறி விடுவேன்" என கூறினார்.
அதே போல, அவரது மனைவியும் தாங்கள் இருவரும் அடிக்கடி வீட்டில் ஜாலியாக பேசிக் கொண்டிருப்போம் என்றும், எந்த விஷயமாக இருந்தாலும் அதனை சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல், மிகவும் நிதானமாக எடுத்துக் கொண்டு அன்பு காட்டிக் கொண்டிருப்போம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதன் பின்னர் மீண்டும் பேசிய அந்த கணவர், "என் மனைவிக்கு அது புரியாமல் போனதன் காரணம் ஏனென்றால், அவர் பள்ளியில் முதல் மார்க் எடுப்பவர். இதனால், நான் ஏன் பிராக்ரஸ் ரிப்போர்ட் பார்க்கிறேன் என்று அவருக்கு புரியவில்லை. ஒட்டுமொத்தத்தில், எனது ஃபீலிங்ஸ் அவருக்கு புரியவில்லை. நானும் அவரிடம் ஏன் இத்தனை நேரம் பிராக்ரஸ் ரிப்போர்ட் பார்க்கிறேன் என்பதை சொன்னதில்லை. அவரும் என்னிடம் ஏன் என்றும் கேட்டதில்லை" என குறிப்பிட்டுள்ளார்.
இதன் பின்னர் பேசிய அவரது மனைவி, "கோபிநாத் சார் சொன்னது எனக்கு நன்கு புரிந்தது. மகள் 92 ரன்கள் மதிப்பெண் எடுக்கும் போது, இன்னும் 8 மார்க்குகளை வாங்கி இருக்கலாமே என தோன்றும். ஆனால், எனது கணவருக்கு அதுவே பெரிதாக இருக்கிறது என்பதே எனக்கு அப்போது தான் தெரிந்தது" என கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!