தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சித்தார்த். இவர் சிறந்த நடிகர் மட்டுமல்ல சிறந்த பின்னணிப் பாடகரும் மற்றும் திரைக்கதை எழுத்தாளரும் கூட. இவர் முதலில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவான 'பாய்ஸ்' படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானவர்.
மேலும் நடிகராக மட்டுமின்றி மணிரத்னத்திடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார் சித்தார்த். மேலும் 'பாய்ஸ்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல படங்களிலும் தனது நடிப்பினை சிறப்பாக வெளிப்படுத்திய சித்தார்த் தமிழின் கவனிக்கத்தக்க நடிகராக உயர்ந்தார்.
தமிழில் பிரபலமான இவர் டோலிவுட் மற்றும் பாலிவுட் சினிமாவிலும் நடித்திருக்கிறார். இவர் நடிப்பது மட்டுமல்லாமல் பொது வெளிகளில் தனது கருத்தை யாருக்கும் பயப்படாமல் கூறும் சித்தார்த் பாராட்டையும், விமர்சனத்தையும் ஒரேநேரத்தில் சந்தித்தும் இருக்கின்றார்.
இவ்வாறாக பல ஏற்றத் தாழ்வுகளை சந்தித்த இவர் விரைவில் சினிமாவை விட்டு விலகி தொழிலதிபர் ஆவப்போவதாக முன்னர் தகவல்களும் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் கடந்த ஆண்டு வெளியான 'மகா சமுத்திரம்' என்ற படத்தில் சித்தார்த்தும், அதிதி ராவும் இணைந்து நடித்திருந்தனர். அந்த சமயத்தில் இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் நெருக்கமாகி காதலில் வந்து நிற்பதாக சமீபத்தில் பேச்சுக்கள் அடிபட்டன.
அதாவது சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் இருவரும் சில மாதங்களாக காதலித்து வருவதாக கூறப்பட்டு வருகிறது. அதற்க்கு ஏற்றாற் போன்று பல இடங்களில் இருவரும் ஒன்றாக சென்றும் வருகிறார்கள்.
ஆனால், இருவரும் இது வதந்தி என்றோ அல்லது காதலிக்கிறோம் என்பது குறித்தோ இதுவரைக்கும் தெரிவிக்கவில்லை. இதுவே இவர்களின் காதலை உறுதி செய்ய ஒரு வாய்ப்பாக அமைந்துவிட்டதாக ரசிகர்கள் கூறியிருந்தனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் பிரமாண்டமாக நடந்த 'பொன்னியின் செல்வன்' படத்தின் உடைய இசை வெளியீட்டு விழாவிற்கு சித்தார்த் மற்றும் அதிதி இருவரும் ஒரே காரில்ஒன்றாக வந்து இறங்கினார்கள். அதுமட்டுமல்லாது விழா நடைபெறும் இடத்திலும் ஒன்றாகவே அமர்ந்திருந்து நிகழ்ச்சியை ரசித்தனர்.
இதை பார்த்த ரசிகர்கள் இருவரின் காதல் உறுதியானது தான் எனப் பதிவிட்டு வருகின்றனர். அத்தோடு இக்காதல் தொடர்பாக விரைவில் அவர்களே அறிவிப்பை வெளியிடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
Listen News!