• Nov 19 2024

துனீஷாவின் மரணத்திற்குக் காரணம் அவரது காதலரே... போலீஸ் விசாரணையில் வெளிவந்த உண்மை..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவுட் சீரியல்களின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை துனீஷா. இவர் முதன்முதலில் பாரத் கா வீர் புத்ரா - மகாராணா பிரதாப் என்ற தொடரில் நடிக்க தொடங்கினார். அதுமட்டுமல்லாது 'இஷ்க் சுபான் அல்லா, கப்பார் பூஞ்ச்வாலா, ஷேர்-இ-பஞ்சாப் மகாராஜா ரஞ்சித் சிங்' மற்றும் 'சக்ரவர்த்தி அசோகா சாம்ராட்' உள்ளிட்ட பல தொடர்களிலும் நடித்துள்ளார். 


சீரியல்களில் மட்டுமல்லாது இந்தி திரைப்படங்களான 'பிதூர், பார் பார் தேகோ, கஹானி 2 துர்கா ராணி சிங்' மற்றும் 'தபாங் 3' ஆகியவற்றிலும் நடித்துள்ளார். இவ்வாறாக திரையுலகில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த 20 வயதான இவர் இன்று மராட்டியத்தில் அலிபாபா தஸ்தான்-இ-காபூல் என்ற தொலைக்காட்சி தொடருக்கான படப்பிடிப்பு தளத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். அத்தோடு மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.


இதுபற்றி வாலிவ் போலீசார் கூறும்போது "படப்பிடிப்பின்போது, தேநீர் இடைவேளையில் நடிகை துனீஷா கழிவறைக்கு சென்றுள்ளார். அதன்பின்னர் அவர் திரும்பி வரவில்லை. இந்த தகவல் கிடைத்து நாங்கள் சென்று, கதவை உடைத்து சென்றோம். இதில், துனீஷா தூக்கிட்ட நிலையில் காணப்பட்டார்" எனக் கூறியுள்ளனர். 

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சக நடிகரான ஷஷென் முகமது கானை கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தற்கொலை செய்துகொண்ட துனீஷா சர்மாவும், அவருடன் வெப் தொடரில் நடித்து வந்த நடிகர் முகமது கானும் காதலித்து வந்தது தெரியவந்துள்ளது. 


அதாவது இருவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். ஆனால், சமீபத்தில் இருவரது உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களுக்கு முன் துனீஷா சர்மாவும் - முகமது கானும் தங்கள் காதலை ஒருவருக்கொருவர் முறித்துக்கொண்டனர். காதல் முறிவால் துனீஷா சர்மா மிகவும் வருத்தத்தில் இருந்துள்ளார். 

இவ்வாறு காதல் முறிவால் மன வருத்தத்தில் இருந்தமையினாலேயே தற்கொலை செய்துள்ளார். இதையடுத்து துனீஷாவை தற்கொலைக்கு தூண்டியதாக நடிகர் ஷஷென் முகமது கானை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதியளித்தது. இதனை தொடர்ந்து நடிகர் ஷஷென் முகமது கான் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement