• Sep 21 2024

கர்ப்பமாக இருக்கும் காவியா... பார்த்திக்குத் தெரிய வந்த உண்மை... பரபரப்பான திருப்பங்களுடன் 'ஈரமான ரோஜாவே-2'..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் ஈரமான் ரோஜாவே சீசன் 2.முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த தொடரின் இரண்டாவது பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலானது அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் தூண்டிய வண்ணம் தான் இருக்கின்றது.

இந்நிலையில் தற்போது இந்த சீரியலின் உடைய புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் காவியா கர்ப்பமாக இருக்கும் விடயம் பார்த்திக்கு தேவி மூலமாக தெரிய வருகிறது. இருந்தாலும் காவியா கர்ப்பமாக இருந்தால் என் கிட்ட சொல்லாமல் இருக்க மாட்டா எனக் கூறி மறுத்துப் பேசுகின்றார். அதற்கு "காவியா கர்ப்பமாக இருக்கிற விஷயத்தை உங்கிட்ட சொல்லல, ஆனால் ஜீவா கிட்ட சொல்லி இருக்கிறா" எனப் பதிலளிக்கின்றார்.


இதனால் பார்த்தி ஆச்சர்யமடைகின்றார். பின்னர் காவியாவிடமே நேரடியாக சென்று "நீ கர்ப்பமாய் இருக்கியா" எனக் கேட்கின்றார். அதற்கு காவியாவும் அழுதபடி ஆமாம் என்கிறார். நீ கர்ப்பமாக இருக்கிறதை எங்கிட்ட சொல்லாமல் ஜீவா கிட்ட சொல்லி இருக்கியா.." எனக் கேட்டு சந்தேகத்துடன் கோபப்படுகின்றார்.


Advertisement

Advertisement