விஜய்யை விட அஜித் பெரிய ஸ்டார் இல்லை, அதனால் வாரிசு படத்திற்க்கு தான் அதிக தியேட்டர் கொடுக்க வேண்டுமென தயாரிப்பாளர் தில் ராஜு கூறியது தற்போது சினிமா துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதற்கேற்றார் போல வாரிசு படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு வருகின்றார்கள்.
ஆனால் துணிவு படத்தின் ப்ரோமோஷனில் அஜித் பங்கேற்கப்போவதில்லை என்பது ஏற்கனவே உறுதியாகிவிட்டது. அத்தோடு நல்ல படத்திற்கு அதுவே தான் விளம்பரம் என அஜித் சமீபத்தில் கூறி இருந்தார்.
இவ்வாறுஇருக்கையில் தற்போது அஜித்தின் பிஆர்ஓ சுரேஷ் சந்திரா ஒரு ட்விட் பதிவிட்டு இருக்கிறார். மேலும் அதில் அஜித் பைக் ரைடு சென்ற ஒரு போட்டோவை போட்டு "No guts no glory !!!" என பதிவிட்டு இருக்கிறார்.
தில் ராஜுவுக்கு பதிலடியாக தான் இப்படி ஒரு பதிவை அவர் போட்டாரா? என நெட்டிசன்கள் விவாதித்து வருகின்றார்கள்.
No guts no glory !!! pic.twitter.com/MI2cxgVwbp
Listen News!