தமிழ் சின்னத்திரையில் மூலம் மக்கள் மத்தியில் அதிகளவில் பிரபல்யமாகி மிகவும் கலகலப்பாக சுற்றிவரும் ஒரு நடிகையே மைனா நந்தினி. இவர் நடித்த தொடர்கள் அனைத்திலும் அனைவரையும் கவரும் விதத்தில் காமெடிகள் செய்து மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார்.
அதிலும் குறிப்பாக சரவணன் மீனாட்சி யாராலும் மறக்க முடியாது. விஜய், ஜீ தமிழ் என இரண்டு தொலைக்காட்சிகளிலும் சிறப்பாகப் பணிபுரிந்துள்ள மைனா தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6ஆவது சீசனில் ஒருவராகக் கலந்துகொண்டிருக்கிறார்.
வழமை போன்று காமெடியான ஒருவராக இருந்து வருகின்றாரே தவிர இன்னும் மைனாவின் விளையாட்டு அவ்வளவாக வெளியே தெரியவில்லை, அதாவது இன்னும் அவர் நன்றாக விளையாட வேண்டும் என அவரது ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் தற்போது மைனா நந்தினிக்காக பிக்பாஸ் ஒரு ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதுஎன்னவென்றால் மைனா நந்தினிக்கு திருமண நாளாம், எனவே அவரது கணவர் யோகேஷ் தன்னுடைய மனைவிக்கு திருமண வாழ்த்து கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாது மைனாவின் மகனும் வீடியோவில் அவருக்கு வாழ்த்து கூற இதைப்பார்த்ததும் நந்தினி குடும்ப பாசத்தில் தேம்பி தேம்பி அழுகிறார்.
இதோ அவரது அந்த எமோஷ்னல் வீடியோ..!
Myna AV For Wedding anniversary#BiggBossTamil6 #BiggBoss#BiggBossTamil pic.twitter.com/rdfiHkmC6i
Listen News!