தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். அந்தக்காலத்தில் இவரின் கம்பீரமான நடிப்பிற்கு நடிப்பிற்கு மயங்காத ரசிகர்களே இல்லை என்று கூறலாம்.
இவரது தோற்றமே இவரை பல்லாயிரக்கணக்கான ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. அதாவது கம்பீரமான நடையும், உரத்த தொனியும் கொண்ட ஒருவராக நடிப்பில் விளங்கி வந்தார்.
இவரைப் போலவே அந்தக்காலத்தில் நகைச்சுவைக்குப் பேர் போன ஒருவராக விளங்கி வந்தவர் வைகைப்புயல் வடிவேலு. இவர் சாதாரணமாக பேசினால் கூடிப் பலருக்கு சிரிப்பு வந்துவிடும்.
இவரின் சிறந்த நகைச்சுவைக்கு காரணம் இவரது பாடி லாங்குவேச் தான். இவர் நடந்தாலும் சரி, பேசினாலும் சரி, எதுவாக இருந்தாலும் இவரின் அனைத்து செயற்பாடுகளிலும் காமெடி ஊறி இருக்கும்.
சினிமாவில் நடித்த காலத்தில் இவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்துள்ளனர். அதுமட்டுமல்லாது விஜயகாந்த், வடிவேலுவுடன் இணைந்து நடித்து வெளிவந்த பல படங்கள் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்திருக்கின்றன.
அந்தவகையில் 'சின்ன கவுண்டர், எங்கள் அண்ணா, தவசி, நரசிம்மா' உட்படப் பல படங்களில் வடிவேலு, விஜயகாந்த் ஆகிய இருவரும் இணைந்து நடித்து அசத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நல்ல நண்பர்களாக இருந்த இவர்கள் இருவருக்குள்ளும் பல வருடங்களுக்கு முன் எழுந்த பிரச்சனை சண்டை வரை சென்றது. அதனைத் தொடர்ந்து இன்றுவரை இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதில்லை.
இந்நிலையில் இவர்கள் இருவருக்குள்ளும் கருத்து முரண்பாடுகள் ஏற்படுவதற்கு முன், அதாவது இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தபோது, நட்சத்திர விழா மேடையில் தோன்றி இருவரும் இணைந்து 'தவசி' பட நகைச்சுவையை நடித்துக் காட்டி அசத்தியுள்ளனர்.
கேப்டன் ❤️ pic.twitter.com/ulLYZRP3Zb
அந்த வீடியோவை தற்போது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறார்கள்.
Listen News!