• Sep 20 2024

ருத்ரன் படத்தில் இடம்பெற்றுள்ள பாடாத பாட்டெல்லாம் பாட வந்தேன் என்ற பாட்டின் வீடியோ ரிலீஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடன அமைப்பாளர், இயக்குநர், நடிகர் என பல அவதாரங்களை எடுத்தவர் ராகவா லாரன்ஸ். சினிமாவோடு மட்டும் நின்றுகொள்ளாமல் தன்னால் முடிந்த உதவிகளை பலருக்கும் செய்துவருகிறார். மூன்று வருடங்களுக்கு பிறகு லாரன்ஸ் இப்போது ருத்ரன் படத்தில் நடித்திருக்கிறார். தயாரிப்பாளர் கதிரேசன் இயக்குநராக இப்படம் மூலம் அறிமுகமாகியிருக்கிறார்

. ப்ரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் பிரமாண்டமாக நடந்தது. படத்தின் ட்ரெய்லரை பார்க்கையில் படம் பக்கா ஆக்‌ஷன் பேக்கேஜாக உருவாகியிருப்பது போல் தோன்றுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.


இப்படமானது அண்மையில் திரையரங்குகளில் வெளியானது. ஓரளவு எதிர்பார்ப்போடு வெளியான ருத்ரன் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இருப்பினும் தாய் செண்ட்டிமெண்ட் படத்தில் நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். அதுமட்டுமின்றி லாரன்ஸின் நடிப்பு படத்தில் நன்றாகவே இருந்ததாகவும், இருப்பினும் கேக்கிங்கிலும், திரைக்கதையிலும் இயக்குநர் கவனம் செலுத்தியிருக்கலாம் என்ற கருத்தும் எழுந்தது.

இந்நிலையில் படத்தில் பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள் பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டிருந்தது. ஆடியோ வெளியிடப்பட்டபோதே இந்தப் பாடல் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. தற்போது அந்தப் பாடலின் முழு வீடியோ வெளியாகியிருக்கிறது. ஸ்ரீதர் மாஸ்டர் கோரியோகிராஃபி செய்திருக்கும் அந்தப் பாடலில் ஒவ்வொரு நடன அசைவும் அனைவரையும் கவரும் வகையில் இருக்கிறது. 



Advertisement

Advertisement