• Sep 21 2024

'கேப்டன் மில்லர்' படத்தில் இருந்து திடீரென விலகிய வில்லன் நடிகர்! காரணம் என்ன தெரியுமா?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தனுஷ் நடித்து வரும் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் முக்கிய வில்லன் கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த நடிகர் ஒருவர் இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தனுஷ் நடிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’கேப்டன் மில்லர்’.

கடந்த 1940 காலங்களில் உள்ள காட்சிகளின் அடிப்படையில் உருவாகி வரும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையாக இருப்பதாகவும் விரைவில் இந்த படத்தின் சில முக்கிய அப்டேட்டுகள் வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த படத்தின் மாஸ் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூன் 30-ம் தேதி வெளியாகும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய வில்லன் கேரக்டரில் நடிக்க நடிகர் டேனியல் பாலாஜி ஒப்பந்தமாகி இருந்த நிலையில் தற்போது அவர் இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாக கூறப்படுகிறது.

அவர் கொடுத்த கால்ஷீட்டுகளில் அவரது காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெறவில்லை என்பதை அடுத்து தற்போது அவரால் புதிய கால்ஷீட் கொடுக்க முடியவில்லை என்றும் அதனால் இந்த படத்தில் இருந்து அவர் விலகி விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் டேனியல் பாலாஜிக்கு பதிலாக வேறொரு நடிகரை வைத்து படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.




Advertisement

Advertisement