தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒரு சாதாரண தொகுப்பாளராக அறிமுகமான பிரியங்கா இன்றைக்கு சின்ன குழந்தையில் இருந்து வயதானவர்கள் வரை அனைவரினதும் ஃபேவரைட் ஆங்கராக மாறி இருக்கின்றார்.
இவரின் கிண்டல், மற்றும் கேலி நிறைந்த பேச்சும் மற்றவர்கள் மீதான அவரின் வேடிக்கையான அணுகுமுறையும் தான் அவரை இப்படியான ஒரு உயர்ந்த இடத்திற்கு கொண்டு சென்று சேர்ந்திருக்கின்றது.
விஜய் டீவியின் பிரபல தொகுப்பாளினியான பிரியங்கா, அதே சேனலில் ஒளிபரப்பாகி வந்த பிரபலமான நிகழ்ச்சியான 'பிக்பாஸ்' ஐந்தாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார். அத்தோடு இந்த சீசனின் டைட்டில் வின்னராக ராஜுவும், இரண்டாம் இடத்தை பிரியங்காவும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறாக விஜய் டீவியில் கடந்த 10 வருடங்கள் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருகின்ற பிரியங்கா ராஜுவுடன் இணைந்து தொகுத்து வழங்கி வந்த பேமஸ் ஆன ஒரு நிகழ்ச்சி தான் 'பிபி ஜோடிகள்'.
இந்த நிகழ்ச்சிக்கு தன்னுடைய படத்தின் ப்ரோமோஷனுக்காக நடிகர் ரன்பீர் கபூர், ராஜமௌலி மற்றும் நடிகர் நாகார்ஜூனா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்கள்.
அப்போது ரன்பீர் கபூரின் பிரபலமான காதல் தோல்வி பாடல் ஒன்றினை தொகுப்பாளினி பிரியங்கா மிகவும் அருமையாக பாடி இருந்தார். அதற்கு உடனே ரன்பீர் கபூர் எழுந்து ஆடத் தொடக்கி விட்டார். அதன்பின்னர் ரன்பீர் கபூருடன் இணைந்து பிரியங்காவும் செம ஆட்டம் போட்டார்.
My heart 🥺♥️hearing pika ma sing this song & ranbir vibing to her singing 😭🙌🏽@Priyanka2804 #PriyankaDeshpande #bbjodigal2 pic.twitter.com/XKSxKtqIUg
இந்த வீடியோ ஆனது தற்போது ரசிகர்களால் சமூக வலைதளத்தில் வைரலாக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!