விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இதன் முதல் பாகம் சூப்பர் ஹிட்டாக ஓடி முடிவடைந்ததைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் ஆரம்பிக்கப்பட்டது.
காதலை மைப்படுத்தி உருவான இந்த சீரியல் ஆரம்பத்தில் மிகவும் பரபரப்பாக ஓடியது எனலாம். ஜுவா- காவியா காதல் எப்போது பார்த்தீபன் மற்றும் ப்ரியாவுக்கு தெரிய வரும் என ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
அத்தோடு இந்த சீரியலில் பார்த்தீபனின் அப்பாவாக அருணாச்சலம் கேரக்டரில் நடித்து வந்தவர் வெளியேறியுள்ளார் என்று இன்று தகவல் வெளியாகியிருந்தது.
அதே போல இதில் நாளை ஒளிபரப்பாக இருக்கும் எப்பிஷோட்டில் ரச்சிதாவின் கணவரும் சீரியல் நடிகருமான தினேஷ் என்ட்ரி கொடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவரது கதாப்பாத்திரம் எப்படி இருக்கும் என அறிய ரசிகர்கள் ஆவலாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!