இங்கிலாந்தை சேர்ந்த பிரபலமான சினிமா நட்சத்திரங்களில் ஒருவரே நடிகர் தேவ் பட்டேல். தனது நடிப்புத் திறமையினால் பல விருதுகளையும் பெற்ற இவர் 'சிலம்டாக் மில்லியனயர், தி செகண்ட் பெஸ்ட் எசோடிக் மரிகோல்ட் ஹோட்டல், சேப்பீ' உட்படப் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாது 'தி நியூஸ் ரூம்' போன்ற தொலைக்காட்சித் தொடர்களிலும் இவர் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவரது திரையுலக பயணத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்திருந்தது இவர் நடித்த 'சிலம்டாக் மில்லியனயர்' என்ற திரைப்படமே. இப்படம் வெளியாகி மிகப் பெரிய அளவில் வெற்றி அடைந்ததன் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பரிச்சியமான நடிகர்களில் ஒருவராக மாறினார்.
இந்த நிலையில் இவர் சமீபத்தில் தெற்கு ஆஸ்திரேலியாவில் இருக்கும் அடிலெய்டுக்கு சென்றிருந்தார். அப்போது அங்கிருந்த கடை ஒன்றுக்கு வெளியே நின்றிருந்த ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே சில தகராறு ஏற்பட்டது. அப்பொழுது அந்த பெண் கோபமடைந்து உடனே கத்தியால் அந்த நபரை மார்பில் குத்தினார். இந்த சண்டையை நேரில் பார்த்த நடிகர் தேவ் பட்டேல் இடையே புகுந்து அவர்கள் இருவரையும் விலக்கி விட்டார்.
அதுமட்டுமல்லாது காயம் அடைந்த அந்த நபர் சிகிச்சைக்காக உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தெரிந்தவர்கள் சண்டை போட்டால் கூட அதனைப் பார்த்தும் பார்க்காத மாதிரி போகின்ற இன்றைய கால கட்டத்தில் யாரோ சண்டை போட்டால் நமக்கு என்னவென்று விட்டுச் செல்லாமல் தேவ் பட்டேல் செய்த காரியம் பொதுமக்கள் அனைவரையும் கவர்ந்து விட்டது.
அந்த சண்டைக்குள் நடுவே புகுந்து சண்டையை விலக்கிவிட்ட நடிகர் தேவ் பட்டேலை பலரும் சமூக வலைதளங்களில் அவரின் தன்னலம் கருதாத செயலை பாராட்டி வருகிறார்கள். அத்தோடு கத்திக்குத்து சம்பவத்தை அடுத்து தேவ் பட்டேலிடம் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமன்றி விசாரணை நடத்திய போலீஸார் கூறுகையில் "ஆகஸ்ட் 1-ஆம் திகதி இரவு 8.45 மணி அளவில் கூகர் தெருவில் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே சண்டை நடப்பதாக எங்களுக்கு போன் அழைப்பு வந்தது. அந்த ஆணுக்கும், பெண்ணுக்கும் ஏற்கனவே பழக்கம் உண்டு. அந்த நபரை கத்தியால் குத்திய பெண்ணை கைது செய்திருக்கிறோம்" எனத் தெரிவித்திருக்கின்றார்கள்.
பிற செய்திகள்
- சிவகார்த்திகேயனின் மனைவி செய்த அந்த செயல்…இந்தக் காலத்திலேயும் இப்பிடி ஒரு பெண்ணா..!
- ஜீ தமிழில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கவுள்ள அச்சும்மா…மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்..!
- யாருமே பார்த்திராத சிவாஜி கணேஷன் புகைப்படம்…பெண்ணா..?ஆணா..?
- “ஜாக்கெட் கூட சரியாக ரெடி செய்யவில்லை”…திடீர் திருமணம் தொடர்பாக நட்சத்திராவின் பதிவு…ஆறுதல் தெரிவித்த ரசிகர்கள்..!
- ரம்பாவும் குஷ்பூவும் இந்தளவுக்கு நல்ல நண்பர்களா..? என்ன பண்ணி இருக்காங்க தெரியுமா..? கண்ணே பட்டிடும் போல இருக்கு..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!