• Nov 17 2024

''என் அம்மாவ பத்தி தப்பான செய்திகள.. ப்ளீஸ் நிறுத்துங்க'' - மீனா மகள் நைனிகா உருக்கம் ...!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

நெஞ்சங்கள் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மீனா. அதன் பிறகு எங்கேயோ கேட்ட குரல், அன்புள்ள ரஜினிகாந்த் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்தார். குழந்தை நட்சத்திரமாக சிவாஜி, ரஜினிகாந்த் உள்ளிட்ட ஆளுமைகளுடன் நடித்த மீனா யாரும் எதிர்பார்க்காத வகையில் தமிழில் ஒரு புதிய கதை படத்தின் கதாநாயகியாக அறிமுகமானர்.

தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பல படங்களில் நடித்தார். அதில் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் தமிழ் சினிமா அவரை உச்சியில் வைத்து கொண்டாடியது. அதனால் நிற்பதற்கு நேரம் இன்றி தமிழில் பல படங்களில் நடித்தார் மீனா.

அவரது அழகும், குழந்தைத்தனமான முகம், பேச்சு என அனைத்துமே ரசிகர்களை கட்டிப்போட கனவுக்கன்னியானார் மீனா.ரஜினி, கமலுடன் மீனா: அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா ரஜினியுடன் ஹீரோயினாக ஏகப்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். 

இந்நிலையில் சமீபத்தில் மீனாவுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. அதில் ரஜினி, சரத்குமார், ராதிகா, குஷ்பூ, ரோஜா உள்ளிட்ட 80ஸ், 90ஸ் நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். அப்போது பேசிய மீனாவின் மகள் நைனிகா, "அப்பா இறந்த பிறகு அம்மா ரொம்பவே டிப்ரஸனில் இருந்தாங்க. ரொம்பவே வலியை அனுபவிச்சாங்க.என் முன்னாடி நிறைய தடவை அழுதிருக்காங்க. அப்போ எனக்கு சோகமாக இருக்கும். இனி அவருக்கு உதவியா இருக்கலாம்னு நினைத்து அப்போதிலிருந்து நான் அவங்களுக்கு உதவியா இருக்கேன். அம்மா என்னை நீங்க கேர் எடுத்து பார்த்துக்குட்டிங்க. இனி நான் உங்களை பார்த்துப்பேன்.

அனைவருக்கும் ஒரு கோரிக்கை. என் அம்மா பத்தி நிறைய பொய் செய்திகள் வெளியிடப்படுகின்றன. அது ரொம்பவே ஹர்ட் ஆகுது. அவங்க கர்ப்பமா இருக்கிறாங்க என்றெல்லாம் செய்திகள் வெளியிடப்பட்டன. அவங்க ஒரு கதாநாயகியாக இருக்கலாம். ஆனால் அவங்களும் ஒரு மனிதர்தான். அவங்களுக்கு பண்ண மாதிரி உங்களுக்கு பண்ணா எப்டி இருக்கும். ப்ளீஸ் இப்படி செய்யாதீங்க. எனக்காக அதை நிறுத்திவிடுங்கள்" என உருக்கத்துடன் கூறினார்.


Advertisement

Advertisement