• Sep 21 2024

திடீரென ஈரமான ரோஜாவே சீரியலில் இருந்து விலகிய இளம் நடிகர்- அடடே இவர் விலகிட்டாரா? நம்பவே முடியலையே

stella / 1 year ago

Advertisement

Listen News!


வெள்ளித்திரையில் நடித்து வரும் பிரபலங்களைப் போல சின்னத்திரையில் நடித்து வரும் நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது.மேலும் தினமும் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருவதால் பல இல்லத்தரிசிகள் சீரியல் பார்ப்பதையே பொழுது போக்காக கொண்டுள்ளனர்.

அப்படி பல டிவி சேனல்களில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகிறது. குறிப்பாக விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று ஈரமான ரோஜாவே. முதல் சீசன் வெற்றிகரமாக முடிந்த நிலையில், 2-வது சீசன் தற்போது பரபரப்பாக சென்றுகொண்டிருக்கிறது.


இதில் தேவி பற்றி உண்மைகள் யாவருக்கும் தெரிந்ததோடு பார்த்திபனும் காவியாவும் இணைந்து விட்டனர்.இதனால் தற்பொழுது இவர்களின் திருமணக் கொண்டாட்டத்தில் அனைவரும் பிஸியாக இருந்து வருகின்றனர்.


இப்படியான நிலையில் இந்த சீரியலில் பார்த்திபனின் கடைசி தம்பியாக அர்ஜுன் என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த தீபக் இந்த சீரியலில் இருந்து விலகியதாகவும் அவருக்கு பதிலாக நவீன் என்பவர் புதிய அர்ஜுனாக இணைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement