தமிழ் சினிமாவில் இன்று வரை தனக்கான இடத்தை பிடித்து இருப்பவர் தான் நடிகர் ரஜனிகாந்த்.
இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் வசூலில் பட்டையை கிளப்பி இருந்தாலும் சமீபகாலமாக வெளியான சில திரைப்படங்கள் பெரிய வசூல் சாதனைகளை படைக்க தவறியது. இதனால் அவரின் அடுத்த திரைப்படமான ஜெயிலர் படத்தை ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். மேலும் இப்படத்தின் ஷூட்டிங் பெரிய ஜெயில் செட் சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இதற்கிடையே ஜெயிலர் திரைப்படம் இப்போது தான் தொடங்கியுள்ள நிலையில் அவரின் திரைப்படத்தை இயக்கவுள்ள இயக்குநர் குறித்து இணையத்தில் தகவல் தீயாய் பரவி வருகின்றது.
ஆம், அதன்படி ரஜினியின் 170-வது திரைப்படத்தை டான் திரைப்படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தி இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் வேலைகள் ரகசியமாக நடந்து வருவதாக மூத்த பத்திரிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Listen News!