• Nov 14 2024

விக்ரம் படம் பார்த்தவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுத்த தியேட்டர்: இது தான் காரணமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

உலக நாயகன் கமல் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் விக்ரம். தீவிர கமலின் ரசிகரான லோகேஷ் கனகராஜ் முதல் முறையாக அவருடன் இணைந்து உருவாகியுள்ள திரைப்படம் விக்ரம்.

இப்படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், சேம்பன் வினோத், காளிதாஸ் ஜெயராம், காயத்திரி, சம்பத்ராம், ஹரிஷ் பெறடி, ஆண்டனி வர்கீஸ், ஷிவானி, மகேஸ்வரி, மைனா, நந்தினி ஆகியோர் முதல் வேடங்களில் நடித்துள்ளனர்.

விக்ரம் திரைப்படம் எதிர்ப்பார்த்தை விட பயங்கரமாக இருந்தது என்றே கூறலாம். இதனால் தற்போது ஒட்டுமொத்த ரசிகர்களும் விக்ரம் படத்தை கொண்டாடி வருகின்றார்கள்.

இந்த நிலையில் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள லட்சுமி திரையரங்கில் விக்ரம் படம் திரையிடப்பட்ட நிலையில் விக்ரம் படம் பார்த்த ரசிகர்களுக்கு பணம் திருப்பி கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது

நேற்று காலை 11 மணி காட்சி ஓடிக் கொண்டிருந்தபோது திடீரென சவுண்ட் இல்லாமல் ஊமை படம் போல் ஓடியது. இதனால் ரசிகர்கள் கொந்தளித்து ஆரவாரம் செய்தனர். மேலும் அந்த தியேட்டரில் ஆடியோவில் பிரச்சனை இருந்ததால் அதை சரி செய்து கொண்டு இருப்பதாகவும் விரைவில் சரியாகிவிடும் என்றும் திரையரங்க நிர்வாகத்தினர் தெரிவித்தனர்

ஆனால் இரண்டு மணி நேரத்திற்கு மேலாகியும் ஆடியோ சரி செய்யவில்லை என்பதால் படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு தியேட்டர் நிர்வாகம் பணத்தை திருப்பிக் கொடுத்தது. எனினும் இதனை அடுத்து பணம் திருப்பிக் கிடைத்தாலும் படத்தை முழுமையாக பார்க்க முடியவில்லையே என்ற அதிருப்தியுடன் ரசிகர்கள் வெளியே சென்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement