இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் இறுதியாக பீஸ்ட் படம் வெளியாகியதைத் தொடர்ந்து தற்பொழுது இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்க வெளியாகவுள்ளது.
இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு தயாரித்து வருகின்றார்.இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது.
இந்நிலையில் வாரிசு படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் நாளை டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி மாலை 4 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. தீ தளபதி என்ற இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். நடிகர் சிம்பு இந்த பாடலை பாடியுள்ளார் என்றும் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிம்பு இயக்குநர் வம்சி & இசையமைப்பாளர் தமன் உடன் இருக்கும் புகைப்படத்தையும் படக்குழு வெளியிட்டுள்ளது.டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி என்பது விஜய் சினிமாவில் அறிமுகமான நாளாகும். நடிகர் விஜய் திரையுலகில் அறிமுகமாகி 30 வருடங்கள் ஆவதையொட்டி இந்த பாடல் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Listen News!