அகில உலக சூப்பர் ஸ்டார் என்ற டைட்டிலோடு வலம் வரும் நடிகர் மிர்ச்சி சிவா, தனது தனித்துவமான நகைச்சுவை கொண்ட பாடி லேங்குவேஜ்ஜால் பலரையும் ரசிக்க வைப்பவர்.
சென்னை 28’, கலகலப்பு’, தமிழ்ப்படம்’ என மூன்று படங்களின் இரண்டாம் பாகத்தில் நடித்த ஒரே தமிழ் நடிகர் இவர் தான் .
தற்போது இவர்,இயக்குநர் ராமு இயக்கத்தில் நடிக்க கமிட்டட் டாகி இருக்கிறார்.ராமு சீரியல் சேனல் நபர்,சிவா சிரிச்சிட்டே இருக்கிற நபர்,ரெண்டும் எப்படி ஒன்னு சேரும். இது ஒரு குழப்பமாகவே இருக்கிறது.இந்த படத்தில் மிர்ச்சி’ சிவா சீரியஸான கேரக்டரில் நடிக்கிறாராம்.
இந்நிலையில் இந்த படம் அப்பா,மகன் தொடர்பான கதையாம்.அப்பாவாக இவர் நடிக்க,இவருக்கு மகனாக குட்டிப் பையன் ஒருவர் நடிக்கிறாராம்.
இவரின் அனைத்து படங்களும் ,அகில உலக சூப்பர் ஸ்டார் மிர்ச்சி’ சிவா என்று தானே வரும்.காமெடி படத்திற்கு இந்த பட்டம் செட் ஆகும். இதில் அப்படி இந்த பட்டத்தை எங்க வைக்கிறது? என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.
அப்போ அகில உலகம் என்ற பட்டத்தை எடுத்திடலாம் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
Listen News!