• Nov 19 2024

ஆண்கள் சொல்லும் அந்த வார்த்தையில் நிறைய அர்த்தங்கள் இருக்கு- பூனம் பஜ்வா வெளியிட்ட வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!


மும்பையில் பிறந்து வளர்ந்தவர் நடிகை பூனம் பஜ்வா. சினிமாவின் மீது கொண்ட ஆர்வத்தால் கடந்த 2005-ம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். இதையடுத்து மூன்று ஆண்டுகள் தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களில் மட்டுமே நடித்து வந்தார்.

இவர் தமிழுக்கு அழைத்து வந்தது இயக்குனர் ஹரி தான். அவர் இயக்கத்தில் கடந்த 2008-ம் ஆண்டு ரிலீசான சேவல் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார் பூனம் பஜ்வா. இப்படத்தில் நடிகர் பரத்துக்கு ஜோடியாக நடித்திருந்தார்.


இதையடுத்து ஜீவாவுடன் சேர்ந்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்த பூனம் பஜ்வா, தான் கவர்ச்சியாக நடிக்கவும் தயார் என்பதை உணர்த்தும் விதமாக கச்சேரி ஆரம்பம் படத்தில் சற்று கிளாமராகவே நடித்திருந்தார்.

இதனை அடுத்து படவாய்ப்புக்கள் குறைந்ததால் ஆம்பள, அரண்மனை 2, குப்பத்து ராஜா போன்ற படங்களில் அவர் சின்ன ரோல்களில் நடித்து இருக்கிறார். சமீபகாலமாக படவாய்ப்புக்கள் இல்லாததால் சமூக வலைத்தளங்களில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார்.

இந்நிலையை ஆண்கள் சொல்லும் ஒரு விஷயத்தை பற்றி விமர்சித்து பூனம் பஜ்வா வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.Let me take you for coffee?' என ஆண்கள் innocent ஆக கேட்பது போல தான் இருக்கும், ஆனால் அதற்கு பல அர்த்தங்கள் இருக்கிறது என பூனம் பஜ்வா கூறி இருக்கிறார். இந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement