சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் இன்று மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்கியது. கடந்த 40 நாட்களாக நிலவை நோக்கி பயணித்து வந்த சந்திரயான் விண்கலம் இன்று தான் சேர வேண்டிய இடத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
இதனை தொடர்ந்து தரையிறங்கும் போது நிலவில் ஏற்பட்ட புழுதி அடங்கும் வரை சுமார் 4 மணி நேரம் ஓய்வெடுத்த விக்ரம் லேண்டர் தற்போது தான் சுமந்திருந்த பிரக்யான் ரோவரை வெளியிட்டுள்ளது.
விக்ரம் லேண்டரில் இருந்து ரோவர் வெளியே வந்ததை அடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் உற்சாக ஆரவாரம் செய்துள்ளனர்.இந்த விஷயத்தை கேள்விப்பட்டு இந்திய மக்கள் அனைவருமே பாராட்டி கொண்டாடி வருகிறார்கள்.
பிரபலங்கள் சந்திராயன் 3 குறித்து பெருமையாக டுவிட் செய்து வருகிறார்கள்.அந்த வகையில் நடிகர் மாதவன் இந்த வெற்றியை விவரிப்பதற்கு வார்த்தைகள் இல்லை,இந்தியாவின் இமாலய வெற்றிககு தனது வாழ்த்துக்கள் என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!