• Nov 17 2024

அவங்க இல்லாதது ஃபீலிங்கா இருக்கு"- அவரே பீல் பண்ணல நீங்க எதுக்கு பண்றீங்க- வருத்தப்பட்ட ஜி.பி முத்துவைக் கலாய்த்த ஷிவின்

stella / 1 year ago

Advertisement

Listen News!


 பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அசல் கோளாறு, GP முத்து, மெட்டி ஒலி சாந்தி, ராபர்ட் மாஸ்டர் தனலக்ஷ்மி மணிகண்டன் ஆகியோர் மீண்டும் வீட்டிற்குள் வந்துள்ளனர். இதனால் போட்டியாளர்கள் இனைவரும் மிகவும் சந்தோஷத்தில் உள்ளனர். இது பார்வையாளர்களையும் கவர்ந்துள்ளது.

அதிலும் ஜி.பி முத்து மீண்டும் வந்துள்ளது அனைவருக்கும் வேற லெவல் கொண்டாட்டமாக உள்ளது. மேலும் ஜி.பி முத்து வீட்டிற்குள் இருக்கும் போது ரச்சிதாவுடன் சேர்ந்து ஆட்டம் போட்டார்.இந்நிலையில் ரச்சிதாவை மிஸ் பண்ணுவதாக ஜிபி முத்து சொல்ல, அதற்கு ஷிவின், “நீங்க ஏன் ஃபீல் பண்ண்றீங்க.. ஃபீல் பண்ணவேண்டிய ஆளே ஃபீல் பண்ணல” என கூற, அதற்கு தலைவர் ஜிபி முத்து, “அவரு ஃபீல் வேற.. என் ஃபீல் வேற” என கூறினார்.


பிக்பாஸ் வீட்டில் ஜிபி முத்துவுக்கும் ரச்சிதாவுக்கும் மரியாதையான நல்லுறவு இருந்தது. ஒருமுறை உடல்நிலை சரியில்லை என கூறப்பட்டது.  அப்போது ஊசி போட்டீங்களா என ஜிபி முத்துவை ரச்சிதா கேட்டார். அப்போது படுத்துக் கொண்டிருந்த ஜிபி முத்துவை ரெஸ்ட் எடுக்க சொன்ன ரச்சிதா, ‘எதுவா இருந்தாலும், கூப்பிடுங்கள்.. நீங்கள் எதுக்காகவாச்சும் எழுந்து வந்தீர்களேயானால் அடி விழும்!’ என உரிமையாக எச்சரித்தார்.


இதனால் தான் ரச்சிதா மீது நல்ல சசோதர பாசத்தில் இருக்கின்றார். இனி வரும் நாட்களில் ரச்சிதா பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுப்பார் என்றும் நம்பப்படுகின்றது.



Advertisement

Advertisement