தமிழ் சினிமாவில் 90களில் இருந்து பிரபல்யமான நடிகையாக இருந்தவர் தான் சிம்ரன். இவர் விஜய், அஜித், கமல் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து ஹிட் ஹீரோயினாக வலம் வந்தார். இவர் தற்பொழுது கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள குணச்சித்திர வேடங்களிலும் வில்லி கதாப்பாத்திரத்திலும் நடித்து வருகின்றார்.
இவரது தங்கை மோனல் தமிழில் பத்ரி, பார்வை ஒன்றே போதுமே, இஸ்டம், பேசாத கண்ணும் பேசுமே என அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து மளமளவென வளர்ந்து வந்த சமயத்தில் திடீரென தற்கொலை செய்துக்கொண்டு இறந்துவிட்டார்.
இந்த விஷயம் சிம்ரனுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது. ஆரம்பத்தில் மோனல் நடிகர் குணாலை காதலித்து காதல் தோல்வியால் இறந்துவிட்டார் என செய்திகள் வெளியானது. ஆனால் அது உண்மையில்லை. மோனல் நடன இயக்குநர் கலா மாஸ்டரின் தம்பியான பிரசன்னாவை காதலித்து வந்தாராம். அவர்களது காதலை கலா மாஸ்டரின் வீட்டார் ஏற்றுக் கொள்ளாததால் பிரசன்னா, மோனலின் காதலை முறித்துக்கொண்டாராம். இதனால் மனமுடைந்த மோனல் தற்கொலை செய்துகொண்டாராம்.
தங்கை மோனலின் இறப்பில் நிறைய மர்மங்கள் இருப்பதாக சிம்ரன் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். மேலும் நடிகர் ரியாஸ் நடிகை மும்தாஜ் அவரின் மரணத்திற்கு தூண்டுதலாக இருந்துள்ளதாகவும், மோனல் இறந்த பின்னர் முதஜ் அவரின் வீட்டிற்கு சென்று அங்கிருந்த தடயங்களை அழித்துவிட்டதாக கூறி பரபரப்பை கிளப்பினார். தங்கை இறந்து பல வருடங்கள் ஆகியும் சிம்ரன் அந்த துயரத்தில் இருந்து மேல முடியாமல் தவித்து வருகிறாராம். அதனால் தான் சிம்ரன் சில வருடம் படங்களில் நடிப்பதையே நிறுத்திக்கொண்டாராம் என்றும் கூறப்படுகின்றது.
Listen News!