இயக்குநர் வெற்றி மாறன் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநராக திகழ்ந்து வருகின்றார்.இவரது பல படங்கள் மக்களின் வாழ்வியலை மையமாக கொண்டு வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.வெற்றிமாறன் சிறப்பான திரைப்படங்களை கொடுத்துவருவதோடு சமூக அக்கறையுடன் பொதுவெளியில் பல கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்.
இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ள வெற்றிமாறன் தற்போது விடுதலை படத்தின் இரண்டு பாகங்களையும் இயக்கி முடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுவரும் நிலையில் படத்தின் முதல் பாகம் விரைவில் ரிலீசாக உள்ளது.
விடுதலை படம் சூரி, விஜய் சேதுபதி முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ள விடுதலை படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிர்களின் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.மேலும் இந்தப் படத்தை தொடர்ந்து சூர்யாவின் வாடிவாசல் படத்தில் வெற்றிமாறன் இணையவுள்ளார். இந்தப் படத்திற்கும் அதிகமான எதிர்பார்ப்பு உள்ளது.
மக்களுக்கு தேவையான கருத்துக்களையும் அவ்வப்போது பகிர்ந்து வருகிறார் வெற்றிமாறன். இந்நிலையில் தற்போது பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற சென்னை இலக்கியத் திருவிழாவில் கலந்துக் கொண்டு பேசிய வெற்றி மாறன் பல கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டுள்ளார். ஓடிடி மற்றும் திரையரங்குகள் குறித்து அவ் தனது கருத்துக்களை முன் வைத்துள்ளார்.
அத்தோடு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஓடிடியில் படங்களை வெளியிடுவதில் அதிகமான சுதந்திரம் காணப்பட்டது போலத்தான் தோன்றியதாகவும் ஆனால் திரையரங்குகளில் படங்களை வெளியிடுவதில் உள்ள சுதந்திரம் வேறு எந்த வடிவத்திலும் இல்லை என்றும் கூறியுள்ளார். ஓடிடியில் படங்களை வெளியிடும்போது தயாரித்த பணத்தை எடுத்துவிடலாம், ஆனால் திரையரங்குகளில் அதிகமாக சம்பாதிக்கும் வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
திரையரங்குகளில் படங்களை வெளியிடும்போது தயாரித்த செலவை விட இரண்டு மடங்கு சம்பாதிக்கும் வாய்ப்பும் உள்ளது அதேசமயம் போட்ட பணத்தை எடுக்க முடியாமலும் போகலாம். இந்த சுதந்திரம் ஓடிடியில் பறிக்கப்படுகிறது என்றும் வெற்றிமாறன் கூறியுள்ளார். அத்தோடு வருங்காலத்தில் ஓடிடியில் குறிப்பிட்ட ஜானரில் படங்களை இயக்கும் கன்டீஷன்கள் போடப்படும் நிலையில், அதிலும் சுதந்திரம் பறிபோகும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு கன்டீஷன்கள் போடப்படும்போது அதை நோக்கிய கதைகளை யோசிக்கும் கட்டாயம் இயக்குநர்களுக்கு உருவாக நேரும் என்றும், அந்த நிலைக்கு போகக்கூடாது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். மக்களுக்கான படம் எடுத்து அதை மக்களுக்காக திரையிடும்போது தான் சினிமாவின் முழு சுதந்திரம் இருக்கும் என்று தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
Listen News!