தனுஷ் நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கியிருக்கும் வாத்தி திரைப்படம். இப்படம் நேற்றைய தினம் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது.இதில் தனுஷுடன் சம்யுக்தா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளில் உருவாகி வெளியாகியுள்ளது.
இதன் மூலம் தனுஷ் தெலுங்கு திரையுலகில் என்ட்ரி கொடுத்திருக்கிறார்.இதன் காரணமாகவே இப்படத்திற்கான எதிர்பார்ப்பும் வேற லெவலில் இருந்தது. ஆனால் அத்தகைய எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்ததா என்று கேட்டால் நிச்சயம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் இப்படத்தில் அளவுக்கு அதிகமாக வீசும் தெலுங்கு நடை தமிழ் ரசிகர்களை கொஞ்சம் அல்ல நிறையவே ஏமாற்றம் அடைய வைத்திருக்கிறது.
அந்த வகையில் படத்தில் ஒரு சில நடிகர்களை தவிர மற்ற அனைவரும் தெலுங்கு திரையுலகை சேர்ந்தவர்கள் தான். அந்த சில நடிகர்களும் தனுஷின் சிபாரிசின் பேரில் தான் இதில் நடித்திருப்பார்கள் போல் தெரிகிறது. இல்லை என்றால் இயக்குநர் தனுஷை தவிர மற்ற கேரக்டர்கள் அனைத்திற்கும் தெலுங்கு நடிகர்களையே தேர்ந்தெடுத்து இருப்பார்.அந்த அளவுக்கு இப்படம் தெலுங்கு படத்தை பார்க்கும் உணர்வை கொடுத்திருக்கிறது. இது எல்லாவற்றிற்கும் மேலாக படத்தில் நடித்திருக்கும் தெலுங்கு நடிகர்களின் உதடு அசைவு கூட தெலுங்கில் தான் இருக்கிறது.
இதுவே அனைவருக்கும் ஏதோ டப்பிங் படத்தை பார்ப்பது போன்ற எண்ணத்தை தருகிறது. இதைக் கூட தாங்கிக் கொண்ட ரசிகர்களால் மற்றொரு விஷயத்தை தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.அதாவது வாத்தி படம் வெளிவருவதற்கு முன்பே இப்படத்தில் இடம்பெற்று இருந்த வா வாத்தி என்ற பாடல் பட்டித் தொட்டி எங்கும் பிரபலமானது. ஒருவகையில் அந்த பாடலுக்காகவே இப்படத்திற்கு சென்ற ரசிகர்களும் இருக்கிறார்கள்.
ஆனால் அப்படி சென்ற ரசிகர்களுக்கு இயக்குநர் ஏமாற்றத்தை தான் கொடுத்திருக்கிறார். அதாவது அந்தப் பாடலில் ஹீரோயினின் உதடு அசைவு கூட தெலுங்கில் தான் இருக்கிறது.இதுதான் ரசிகர்களை இப்போது கடுப்பேற்றி இருக்கிறது. இதற்கு ஏன் தனுஷை ஹீரோவாக தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கும் தெலுங்கு நடிகரை வைத்து தெலுங்கிலேயே படத்தை இயக்கி இருக்கலாமே என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Listen News!