• Sep 20 2024

லியோவில் நரபலி என்றொரு விஷயம் தேவையே இல்லாதது! சாண்டியை விட டம்மி வில்லனான சஞ்சய் தத்! கொந்தளிக்கும் விமர்சனங்கள்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் தற்போது உலகளவில் வெளியாகி ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்து வருகின்ற நிலையில், படம் தொடர்பான பல்வேறு விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், உலகளவில் திரையிடப்பட்ட லியோ படத்துக்கு வலைப்பேச்சு பிஸ்மி கொடுத்துள்ள விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.  

அதன்படி வலைப்பேச்சு பிஸ்மி கூறுகையில், லியோ படத்தின் கதையில் பெரிதாக ஒன்றும் இல்லை. ரஜினியின் பாட்ஷா டைப் போலவே உள்ளது. அதேநேரம் திரைக்கதையில் லோகேஷ் கொஞ்சம் வித்தியாசம் காட்டியுள்ளார்.மேலும், விஜய் தனது வழக்கமான பாணியில் இருந்து விலகி வந்து, இன்ட்ரோ சாங், மாஸ் என்ட்ரி சீன்ஸ் இல்லாமல் நடித்துள்ளமை பாராட்டுக்குரியது.


எனினும்,  வழக்கமான மசலாத்தனமான விஜய்யை லியோவில் பார்க்க முடியவில்லை. அதேநேரம் லியோவில் சுவாரஸ்யம் எதுவும் இல்லாமல் பார்க்க சுமாராகவே இருக்கு.படத்தின் தொடக்க காட்சியில் விஜய்யின் அமைதியான வாழ்க்கை ரொம்பவே சலிப்பூட்டுவதாகவும், அதன்பின்னர் நடக்கும் மாற்றங்கள் ஓக்கே தான் என்றுள்ளார். இப்படியொரு கதையில் நடித்த விஜய், அதற்காக நிறைய மாறியுள்ளதும் நன்றாகவே தெரிகிறது. அதேபோல், வில்லன் கேரக்டரில் சஞ்சய் தத், அர்ஜுன் நடித்திருந்தாலும் அதில் எந்த தாக்கமும் இல்லை, சாண்டி மாஸ்டர் கேரக்டர்களை விட சஞ்சய் தத் டம்மியாக தெரிகிறார். அர்ஜுன் கேரக்டரும் அப்படியே புஷ்வானமாகிவிடுகிறது.

இந்த கதையில் நரபலி என்ற விஷயம் தேவையே இல்லாத ஒன்று.  அதேநேரம் படத்திலுள்ள அதீத வன்முறை காட்சிகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனவும் வலைப்பேச்சு பிஸ்மி தனது விமர்சனத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.  


அதேவேளை, ப்ளூ சட்டை மாறனின் லியோ விமர்சனத்தை நோக்கினால், லோகேஷ் கனகராஜ்ஜை பங்கமாக கலாய்த்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். அதாவது லோகேஷ் கனகராஜ் 10 படங்களுக்கு மேல் இயக்க மாட்டேன் எனக் கூறியிருந்தார். 

அதனை குறிப்பிட்டு, லியோ லோகேஷின் 5வது படம்இ இதுவே கழுதை தேஞ்சு கட்டெறும்பு ஆன கதையா தான் இருக்கு. அதுக்கு குறியீடா படத்துலயே கழுதப் புலி கூட இருக்கு. லியோவை பார்க்கும் போதே தெரியுது, இனிமேல் லோகேஷ் கைதி மாதிரி ஒரு படத்தை கொடுத்துடவே மாட்டார்ன்னு நம்பலாம்.

லோகேஷ் லைன்அப்ல அடுத்து ரஜினியின் தலைவர் 171 படம் இருக்கு. தலைவர போடறதுக்கு இப்போதைக்கும் நம்ம ஏரியாவுல இருக்குற ஷார்ப்பான புள்ளிங்கோ லோகேஷ் தான். இதே ஃபார்ம்ல போய்ட்டு தலைவர அட்டாக் பண்ணிடுங்க என லோகேஷ் கனகராஜ்ஜை கலாய்த்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.


Advertisement

Advertisement