போடா போடி படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இப்படம் கடந்த 2012-ம் ஆண்டு ரிலீஸானது. இதனை அடுத்து மூன்று ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் நயன்தாரா மற்றும் விஜய்சேதுபதியை வைத்து நானும் ரௌடி தான் என்னும் படத்தை இயக்கி இருந்தார். இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.
இப்படத்தினைத் தொடர்ந்து பல படங்களை இயக்கி வந்த இவர் இறுதியாக நயன்தாராவை வைத்து நெற்றிக்கண் என்னும் திரைப்படத்தை இயக்கி இருந்தார்.இதனை அடுத்து கடந்த ஆண்டு நடிகர் அஜித்தை வைத்து திரைப்படத்தை இயக்குவதாக அறிவித்திருந்தார்.
இருப்பினும் விக்னேஷ் சிவனின் கதை பிடிக்காததால் அஜித் அந்தப் படத்திலிருந்து வெளியேறி விட்டார். இதனை அடுத்து விக்னேஷ் சிவன் யாரை வைத்து படம் இயக்கப் போகின்றார் என்ற எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர்.
இப்படியான நிலையில் இன்று சென்னையில் போதைப்பொருட்களுக்கு எதிரான ஆவணத் திரைப்பட போட்டியின் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் விக்னேஷ் சிவனும் கலந்து கொண்டு பேசினார். அதில் அவர் கூறியதாவது
இப்போ ரிலீஸ் ஆகிற திரைப்படம் எல்லாமே இளைஞர்களை மையமாக வைத்தே எடுத்து வருகிறாங்க. சமீபகாலமாக திரைப்படங்களில் சிகரெட் பிடிக்கிறது மரு அருந்திற சீன் எடுத்தால் எல்லாம் கீழே இது பண்ணக் கூடாது என்று போடுறாங்க. பெரும்பாலான படங்களில் இதை குறைச்சிட்டாங்க. இது வர வர குறைஞ்சிடும் என்று நினைக்கிறேன்.
என்னுடைய படங்களில் குடிக்கிற மாதிரியோ தம் அடிக்கிற மாதிரியோரி சீன் எடுத்தது கிடையாது. இப்ப வரைக்கும் அதை போலோ பண்ணிட்டு வருகின்றேன். அதை எதிர்காலத்திலும் பண்ணுவேன் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!