வம்சி இயக்கிய இப்படம் கடந்த ஜனவரி 11-ந் தேதி பொங்கல் விருந்தாக திரைக்கு வந்தது.விஜய் கதாநாயகனாக நடித்திருக்கும் இத்திரைப்படம் வெளியாகி ஒரு சில நெகடிவ் விமர்சனங்கள் வந்தாலும், குடும்பத்தோடு பார்க்கும் வகையில் படம் உள்ளதால் பேமிலி ஆடியன்ஸிடம் இதற்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது.
பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில் வெளியான இப்படம் வெளியாகி 7 நாட்களில் உலகளவில் ரூ.210 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியதாக தயாரிப்பு நிறுவனம் தரப்பில் கடந்த சில தினங்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், வாரிசு படம் இந்த அளவுக்கு வசூலிக்க வாய்ப்பே இல்லை என திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
வாரிசு படத்தை தமிழகம் முழுவதும் லலித் குமார் வெளியீடு செய்துள்ளார். அதிலும் சில ஏரியாக்களில் இப்படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதுதவிர வெளிநாட்டில் இப்படத்தை வேறு ஒரு நிறுவனம் வெளியிட்டுள்ள நிலையில், உலகளாவிய வசூல் அதற்குள் எப்படி தெரியும்? என கேள்வி எழுப்பியுள்ள அவர், முழுமையான வசூல் நிலவரம் தெரிய சில நாட்கள் ஆகும் என கூறியுள்ளார்.
பொங்கலுக்கு துணிவு படமும் ரிலீஸ் ஆகி நன்றாக ஓடி வருவதால் வாரிசு படம் ரூ.210 கோடி வசூலித்திருக்க 200 சதவீதம் வாய்ப்பே இல்லை என திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி விளம்பரத்துக்காக இதுபோன்று ஆதாரமற்ற கலெக்ஷன்களை வெளியிடுவதனால் தான் ஹீரோக்கள் தங்கள் சம்பளத்தை கோடி கோடியாக உயர்த்திக் கொண்டே இருப்பதாக அவர் குற்றம் சாட்டி உள்ளார். வாரிசு படக்குழு வெளியிட்டது உண்மையான வசூல் இல்லை என திருப்பூர் சுப்ரமணியம் கூறி உள்ளதால், அப்போ தில் ராஜு சொன்னது பொய்யா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Listen News!