• Nov 17 2024

"முத்தக்காட்சியில் ஆபாசம் இருக்காது"- லிப்லாக் காட்சி குறித்து 18 வயதான அனிகா விளக்கம்

Prema / 1 year ago

Advertisement

Listen News!

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக பல்வேறு படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அனிகா. தமிழில் இவர் இவர் கடந்த 2015-ஆம் ஆண்டு கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான 'என்னை அறிந்தால்' என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இப்படத்தில் தமிழ் சினிமாவின் டாப் நாயகனான அஜித்தின் மகளாக நடித்து அசத்தி இருந்தார். 


இதனைத் தொடர்ந்து மேலும் ஒரு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த அனிகா தற்போது ஹீரோயினாகவும் களமிறங்கி இருக்கின்றார். அந்த வகையில் ஹீரோயினாக அனிகா நடித்த முதல் திரைப்படம் 'புட்ட பொம்மா'. இப்படமானது 'கப்பேலா' எனும் மலையாள படத்தின் உடைய தெலுங்கு ரீமேக் ஆகும். இப்படமானது சமீபத்தில் தான் வெளியானது.


இதனையடுத்து அனிகா மலையாளத்தில் 'ஓ மை டார்லிங்' என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கின்றார். ஆல்ஃப்ரெட் டி சாமுவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் மெல்வின் ஜி பாபு என்பவருக்கு ஜோடியாக அனிகா நடித்திருக்கிறார். இப்படமானது காதலை மையமாக வைத்து உருவாகியுள்ள ரொமாண்டிக் கதையம்சம் நிறைந்த ஒரு படமாகும்.


இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரல் ஆனது. இதற்கு காரணம் இப்படத்தில் அனிகா ஏராளமான லிப்லாக் காட்சியில் நடித்துள்ளமை தான். அந்த காட்சிகள் டிரைலரிலும் இடம்பெற்று இருந்தன. அதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் 18 வயதான அனிகாவா இப்படி எனக் கேட்டு ஷாக் ஆகினர்.


இந்நிலையில், லிப்லாக் காட்சியில் நடித்தமை குறித்து அனிகா முதன் முறையாக விளக்கம் அளித்துள்ளார். அதாவது அவர் கூறுகையில் "ஓ மை டார்லிங் முழுநீள காதல் படம். அதில் முத்தக்காட்சி இடம்பெறுவதை தவிர்க்க முடியாத ஒன்று. கதை சொல்லும்போதே இந்த காட்சிக்கான முக்கியத்துவத்தையும் இயக்குநர் என்னிடம் சொல்லி இருந்தார். கதைக்கு தேவைப்பட்டதால் தான் நான் அதில் நடித்தேன். அந்த காட்சிகளில் துளி அளவு கூட ஆபாசம் இருக்காது. படம் பார்க்கும் போது ரசிகர்களுக்கு அது புரியும்” எனத் தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement