இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் கடந்த 2015ம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் தான் காக்கா முட்டை. இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இவருடன் குழந்தை நட்சத்திரங்களான ரமேஷ் மற்றும் ஜே. விக்னேஷ் ஆகியோர் நடித்திருந்தனர்.
பீட்ஷாவை சாப்பிட ஆசைப்படும் இரண்டு ஏழை குழந்தைகள் பீட்ஷாவை வாங்குவதற்காக எவ்வளவு முயற்சிகள் செய்கின்றார்கள் என்பதையே இப்படம் எடுத்துக் காட்டியதோடு இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இப் படத்தினைத் தொடர்ந்து தான் ஐஸ்வர்யா ராஜேஸிற்கு படவாய்ப்புக்கள் குவிய ஆரம்பித்ததோடு தற்பொழுது நல்ல படங்களைத் தேர்வு செய்து நடித்தும் வருகின்றார்.
இந்த நிலையில் இதில் குழந்தை நட்சத்திரங்களாக நடித்த ரமேஷ் மற்றும் ஜே. விக்னேஷ் இருவரும் பேட்டியளித்துள்ளனர். அதில் நாங்க ரெண்டு பேருமே உண்மையாகவே பீட்ஷா சாப்பிட்டதே இல்லை. அன்டைக்கு சூட்டிங்கிற்காக வந்த போது தான் அந்த பீட்சாவை சாப்பிட்டு பார்த்தோம். அது நல்லாவே இல்லை. படத்தில சொன்ன மாதிரி தான் இருந்திச்சு என்று ஜாலியாக பேசியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!