அமேசான் ஓடிடி தளத்தில் பிரபல இயக்குநர் வினயன் இயக்கத்தில் 'பத்தொன்பதாம் நூற்றாண்டு' திரைப்படம் இந்த மாதம் பிரமாண்டமாக வெளியானது. இப்படத்தில் நடிகை கயாடு லோஹர் நங்கேலியாக நடித்திருந்தார்.
மேலும் இப்படத்தில் தோள் சீலை புரட்சிக்கு வித்திட்ட நங்கேலியின் மிரட்டலான காட்சிகளை நெட்டிசன்கள் பலரும் தற்போது இணையத்தில் தீயாக ஷேர் செய்து வருகின்றனர்.
அதுமட்டுமல்லாது சாதிய வன்மம் எந்தளவுக்கு மக்களை பாதித்துள்ளது என்பதையும், இன்றும் சாதிய பிரச்சனைகளை கிளப்புவர்கள் மனிதர்கள் தானா? எனவும் கேட்டு விளாசி வருகின்றனர்.
அந்தவகையில் சாதியும் மதமும் மனிதர்களால் மனிதர்கள் சீர் பட நல் வாழ்க்கை வாழ்வதற்காக வகுக்கப்பட்டவை. ஆனால், சிலர் தங்களுடைய சுயநலத்திற்காக சில மக்களை தாழ்த்தப்பட்ட சாதியினராக பிரித்து அவர்களை இன்னமும் அடிமைகளாக வைத்திருப்பது கொடுமை.
பலவற்றைப் படித்தும் கல்வி அறிவு பெற்றும் இன்னமும் ஏன் இப்படிப்பட்ட கீழ்த்தரமான செயல்களை மனிதர்கள் செய்து வருகின்றனர் என்கிற கேள்வியை நங்கேலி மார்பை அறுக்கும் அந்த காட்சியை தீயாக ஷேர் செய்து ரசிகர்கள் பலரும் கேட்டு வருகின்றனர்.
அதேநேரத்தில் தாழ்த்தப்பட்ட சாதி பெண்கள் தங்களின் மானத்தை காக்க மாராப்பு அணியக் கூடாது என்றும், அப்படி அணிய வேண்டும் என்றால் அதற்கு முலை வரி (breast tax) கட்ட வேண்டும் என கேரளாவில் நிலவிய அதிகபட்ச கொடுமையை எதிர்த்து புரட்சி வெடிக்க செய்த நங்கேலியின் காட்சியை பத்தொன்பதாம் நூற்றாண்டு படத்தில் தத்ரூபமாக படமாக உருவாக்கி சாதிய வெறியர்களுக்கு சவுக்கடி கொடுத்திருக்கிறார் இயக்குநர் வினயன் எனவும் கூறி அவரை ஒரு சிலர் புகழ்ந்தும் வருகின்றனர்.
Listen News!