மலையாளத்தை தாய் மொழியாகக் கொண்டிருந்தாலும் தனது திறமையினாலும், கடின உழைப்பினாலும் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறியிருப்பவர் நடிகை அமலா பால். இவர் 'நீலதம்ரா' என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமாத் திரையுலகில் அறிமுகமாகி இருந்தாலும் தமிழில் இவருக்கான நாயகி என்ற அந்தஸ்தைக் கொடுத்தது 'சிந்து சமவெளி' என்ற திரைப்படமே.
இதனைத் தொடர்ந்து இவர் நடிப்பில் 2010-ஆம் ஆண்டில் வெளியாகி இருந்த 'மைனா' திரைப்படத்தின் மூலம் மேலும் மக்கள் மத்தியில் பிரபலமானார். இத்திரைப்படத்திற்காக இவர் சிறந்த புதுமுக நடிகைக்கான விருதினை வென்றிருக்கின்றார். அத்தோடு 'காதலில் சொதப்புவது எப்படி, வேட்டை, தெய்வத் திருமகள், தலைவா' எனப் பல படங்களில் நடித்திருக்கின்றார்.
நடிகை அமலாபால் இயக்குநர் ஏ.எல்.விஜய் என்பவரைக் காதலித்து வந்த நிலையில் 2014 இல் திருமணமும் செய்து கொண்டார். எனினும் இவர்கள் இருவரிற்குமிடையில் இடம்பெற்ற கருத்து வேறுபாடுகளின் காரணமாக அவரது மண வாழ்க்கை 2 வருடங்களிற்குள் முடிவுக்கு வந்தது.
இவ்வாறாக பல தோல்விகள், சர்ச்சைகளில் சிக்கி வந்தாலும் நடிகை அமலா பால் என்றுமே இதை நினைத்து வருந்தியது இல்லை. அன்று போல் இன்றும் சந்தோஷமாகவே இருந்து வருகின்றார். அதுமட்டுமன்றி இவர் கவர்ச்சி உடையில் அதிக கவனம் செலுத்தி வருவது வழமை. அடிக்கடி கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி அதனை இணையத்தில் பதிவிட்டு வருவார்.
இதே போன்றே சமீபத்தில் இவர் படு கவர்ச்சி உடையில் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகி வருகின்றன.
பிற செய்திகள்
- பிரபல நடிகை கர்ப்பமாக இருக்கின்றாரா..? குழப்பத்தை கிளப்பிய நெட்டிசன்கள்..! காரணம் இதுவா..?
- கவர்ச்சி உடையில் ரசிகர்களைக் கவரும் ஐஸ்வர்யா மேனன்…வெளியான புகைப்படங்கள்..!என்னம்மா இப்பிடிப் பண்றீங்களே..?
- விமர்சனம் செய்ய ப்ளூ சட்டை மாறன் 3 லட்ச ரூபாய் கேட்டாரா?..பார்த்திபனின் பரபரப்பு குற்றச்சாட்டு..!
- சிம்புவின் போஸ்டரை அகற்றிய போலீஸார்…காரணம் என்ன..?
- மேடையில் வைத்து திடீரென தனது இரண்டாவது மனைவிக்கு முத்தமிட்ட கமல்…இணையத்தை கலக்கும் வீடியோ…!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!