பிரபல தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றான விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 6 பிரபலமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. அத்தோடு கடந்த வாரம் ஜனனி வெளியேறிய நிலையில், இந்த வாரம் யார் வெளியேறுவார் என மக்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
அந்தவகையில் தற்போது வரை மைனா நந்தினி மற்றும் ரச்சிதா ஆகியோருக்கு ஓட்டு எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. இவர்களில் ஒருவர் வெளியேறலாம் என பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த பிக்பாஸ் வீடு இந்திரன் சந்திரன் எனும் கலைக்கல்லுாரியாக மாறப்போகின்றது.1980 களில் இருக்கும் கல்லுாரியாக கொண்டு வரவேண்டும். இரண்டு நடன ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என ஒரு புதிய டாஸ்க் ஒன்று கொடுக்கப்படுகின்றது.
இந்நிலையில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது. அதில் விக்ரமன் இன்டர்வீயூ பண்ணனும் என்று நினைக்கின்ற 2நபர்களைக் கூப்பிட்டு இன்டர்வீயூ பண்ணுமாறு கூறுகின்றார். அந்தவகையில் ஷிவின் தனத்திடம் கேள்விகளைக் கேட்கின்றார். அதாவது நீங்க விளையாடின விளையாட்டுக்களை வெளிய போய்ப் பார்க்கும் போது பெருமைப்படுவீங்களா எனக் கேட்கின்றார். அதற்கு தனமும் கண்டிப்பாக பெருமைப் படுவேன் என்றுதான் கூறுகின்றார்.
அதேபோல் ஏடிகே "இந்த வீட்டினுடைய புரிதல் உங்களிற்கு எந்த அளவிற்கு இருக்கின்றது" என அசீமிடம் கேட்கின்றார். அதற்கு அசீம் "அவங்க அவங்களாகத் தான் இருக்காங்க என்று சொல்லுற யாரும் அவங்களாகவே இல்லை" எனக் கூறுகின்றார்.
இவ்வாறாக இன்றைய நாளுக்குரிய ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது.
இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ..!
Listen News!