இந்தியாவில் டிக்டாக் செயலிக்கு அனுமதி இருந்த போது மக்களிடையே பிரபலமானவர்களில் ஒருவர் ஜி.பி. முத்து. இவர் தினந்தோறும் 70 க்கும் மேற்பட்ட வீடியோக்களை போடுவார்.மரக்கடை வைத்திருந்த நிலையில் அந்த தொழிலை கைவிட்டுவிட்டு முழு நேரமும் டிக்டாக் வீடியோக்களை எடுத்து வந்தார்.
இந்த நிலையில் இந்தியாவில் டிக்டாக் செயலிக்கு தடை செய்யப்பட்டது. இதையடுத்து டிக்டாக்கில் இருந்தவர்கள் யூடியூப் சேனல் தொடங்கினார்கள்.எனவே ஜிபி முத்துவும் யூடியூப் சேனல் தொடங்கி தனது காமெடியான வீடியோக்களை பதிவிடுவதன் மூலம் பிரபல்யமானார்.
இந்த நிலையில் ஜிபி முத்து என்றாலே கோமாளி என்று கூறியிருந்த நிலையில் அவரது இமேஜை பிக்பாஸ் நிகழ்ச்சி மாற்றியது. இந்த நிகழ்ச்சியில் தனது மகனுக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் 13 நாட்கள் கழித்து வெளியேறினார்.இந்த நிலையில் வேலூர் சத்துவாச்சாரியில் மாற்றுத்திறனாளிகளுக்கு இடையே மாநில அளவிலான அமர்வு கைப்பந்துப் போட்டி தொடங்கியது. இதில் புகழ் ஜி.பி.முத்துவும் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் ஜி.பி. முத்து பேசுகையில் என் மனைவியும் மாற்றுத்திறனாளிதான். ஆனால் அவரை ஒரு நாளும் நான் மாற்றுத்திறனாளியாக பார்த்ததே கிடையாது. நான் இந்த அளவுக்கு உயர்ந்திருக்க காரணமே எனது மனைவிதான். ஆரம்பத்தில் வேலைக்கு போக பிடிக்காமல் டிக்டாக் மோகத்தில் வீடியோவாக எடுத்து போடுவேன்.
என் மனைவி பல முறை கண்டித்துள்ளார். ஆனால் நான் கேட்கவில்லை, நிறைய இடங்களில் வேலை செய்து விட்டு டிக்டாக் வீடியோ போடுவதற்காக வந்துவிடுவேன். குடும்பத்தையும் பிள்ளைகளையும பார்க்கவே மாட்டேன். என் மனைவிதான் கவனித்து கொள்வார். அவர் கையில் ஒரு 100 ரூபாய் இருந்தாலும் கூட அதை இரு நாட்களுக்கு வைத்து சமாளித்துவிடுவார். திருமணத்திற்கு முன்பு நிறைய பேர் பெண் பார்க்க வந்து என் மனைவியை பிடிக்கவில்லை என சொல்லிவிட்டனர்.
ஆனால் நான் பார்த்தவுடன் இந்த பெண்ணைதான் கட்ட வேண்டும் என முடிவு செய்தேன். ஆனால் எனது தாய் தந்தையர் , மாற்றுத்திறனாளியாக உள்ள என் மனைவியை கல்யாணம் செய்து கொள்ள கூடாது. அந்த பெண்ணுக்கு குழந்தையே பிறக்காது என்றார்கள். ஆனால் நான் அதையும் மீறி 6 மாதங்களில் திருமணம் செய்து கொண்டேன். எங்களுக்கு 4 பிள்ளைகள் பிறந்தன. அவர்களில் இரு குழந்தை இரட்டையர்கள். என் மனைவிக்கு தன்னம்பிக்கை அதிகம். மாதம் ஒரு முறை ஆசிரமம், முதியோர் இல்லங்களுக்குச் சென்று உணவு வழங்கி நிம்மதியாக வாழ்ந்து வருகிறோம் என ஜி.பி. முத்து தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!