தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் சித்தார்த். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிக்கின்றன. அந்த வகையில் இவரது நடிப்பில் இறுதியாக சித்தா என்னும் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
இயக்குநர் அருண்குமார் எழுதி இயக்கத்தில் வெளியாகிய இப்படம் சித்தார்த்தின் கெரியரிலேயே முக்கியமான திரைப்படமாக அமைந்துள்ளது.இப்படத்தைப் பார்த்த கமல்ஹாசன்,உதயநிதி எனப் பிரபலங்கள் பலரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
பான் இந்திய திரைப்படமாக உருவாகி உள்ள இத்திரைப்படம், ஆந்திராவில் வருகிற 6ம் தேதியன்று வெளியாக இருக்கும் நிலையில், இத்திரைப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்வில் பேசிய நடிகர் சித்தார்த் கண்கலங்கி பேசினார். அதில், தமிழில் பிரபல ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம், இந்தப்படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கி தமிழ்நாட்டில் படத்தை வெளியிட்டது.
கேரளாவில் கோகுலம் கோபாலன், தன்னுடைய 55 வருட பயணத்தில் இப்படி ஒரு படத்தை பார்த்தது இல்லை என்று கூறி இந்தப்படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கிக்கொண்டார். அதேபோல, கர்நாடகாவில், கே.ஜி.எஃப் திரைப்படத்தை தயாரித்த ஹோம்லே தயாரிப்பு நிறுவனம், இப்படம் சிறப்பான படம் பிடித்திருப்பதாக கூறி, அந்தப்படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கியது.
ஆனால் தெலுங்கில் சித்தார்த் படத்தை யாரு பார்ப்பார் என்று கேட்டார்கள். என்னை அவமானப்படுத்தினார்கள். அவர்கள் எல்லாக் கதவையும் மூடிவிட்டனர். ஏசியன் சுனில் மட்டுமே இந்தப்படத்தை வெளியிட முன் வந்தார். இதனை யாராவது எதிர்த்தால், தெலுங்கு பார்வையாளர்களை தவிர்த்து விடுவேன் என்று நடிகர் சித்தார் உணர்ச்சி வசப்பட்டு பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!