தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம் படம் ஆகஸ்ட் 19 ஆம் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடத்தே நல்ல வரவேற்ப்பு பெற்று வருகின்றது.
அனிருத் இசையில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகியுள்ளது இத் திரைப்படம் .
இந்த படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான நிலையில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது.
மேலும் இந்த படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் மற்றும் ராஷி கண்ணா ஆகியோர் நடித்திருந்தனர். இதில் நித்யா மேனன் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
கர்ணன் திரைப்படத்திற்கு பிறகு தனுஷின் திரை வாழ்க்கையில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்றுள்ள திரைப்படமாக அமைந்துள்ளது திருச்சிற்றம்பலம்.
இந்நிலையில், திருச்சிற்றம்பலம் வெளிவந்த 5 நாட்கள் முடிவடைந்த நிலையில் உலகளவில் ரூ. 60 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
Listen News!