• Sep 21 2024

4 நாட்களில் அசுரன் பட சாதனையை முறியடித்து வசூல் வேட்டை நடத்தி வரும் திருச்சிற்றம்பலம் திரைப்படம்

stella / 2 years ago

Advertisement

Listen News!


கடந்த சில தினங்களுக்கு முதல் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்று வரும் திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம். இப்படத்தில் கதாநாயகனாக தனுஷ் நடித்து அசத்தியிருந்தார். இப்படத்தை யாரடி நீ மோகினி, குட்டி, உத்தம புத்திரன் போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய மித்ரன் ஆர் ஜவகர் இயக்கியிருந்தார்.

இப்படங்களிலும் கதாநாயகனாக தனுஷ் தான் நடித்திருந்தார் என்பதும் யாவரும் அறிந்ததே.திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷிற்கு ஜோடியாக  ராஷி கண்ணா, நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்திருந்தனர். இதுதவிர தனுஷின் தந்தையாக பிரகாஷ் ராஜும், தாத்தாவாக பாரதிராஜாவும் நடித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார். 


திருச்சிற்றம்பலம் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூல் பார்த்து வருகிறது. அதன்படி இப்படம் வெளியாகி 4 நாட்கள் முடிவில் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. நடிகர் தனுஷின் கெரியரில் அதிவேகமாக 50 கோடி வசூல் செய்த படம் என்கிற சாதனையையும் இப்படத்திற்கு கிடைத்துள்ளது.


இதற்கு முன் தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் வெளியான அசுரன் திரைப்படம் ரூ.50 கோடி வசூலை 10 நாட்களில் கடந்ததே சாதனையாக இருந்த நிலையில், தற்போது திருச்சிற்றம்பலம் திரைப்படம் நான்கே நாட்களில் ரூ.50 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. விரைவில் இப்படம் ரூ.100 கோடி வசூல் செய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement