• Sep 21 2024

'கங்குவா' படத்தில் சூர்யாவிற்கு வில்லன் இந்த நடிகர் தானாம்... அடடே படம் தூள் பறக்க போகுது..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் சூர்யாவை வைத்து சிறுத்தை சிவா இயக்கும் திரைப்படம் தான் 'கங்குவா'. இப்படமானது பெரும் பொருட் செலவில் பான் இந்தியப் படமாக தயாராகி வருகிறது. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானியும், இன்னொரு ஹீரோயினாக மிருணாள் தாக்கூர் நடிப்பதாக கூறப்படுகின்றது.


மேலும் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் பிரமாண்டமாகத் தயாரிக்கும் இப்படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தில் குறிப்பாக 13 கதாபாத்திரங்களில் கங்குவா அரசனாக சூர்யா நடிப்பதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகரித்த வண்ணமே இருக்கின்றது. 


அத்தோடு சூர்யாவுக்கு வில்லனாக இப்படத்தில் நடிப்பது யார் என்ற கேள்வி நீண்டகாலமாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அந்த வில்லன் நடிகர் யார் என்ற சுவாரஸ்யத் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது நட்டி நட்ராஜ் தான் இப்படத்தில் வில்லன் எனக் கூறப்படுகின்றது.


Advertisement

Advertisement