பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த வாரம் சற்று டல் அடித்தாலும், இந்த வாரம் படு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அதிலும் இந்த வாரம் கொடுக்கப்பட்ட டாஸ்க்கினால் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிலும் நேற்றைய தினம் தனலக்ஷ்மி மற்றும் மணிகண்டனுக்கும் இடையில் நடைபெற்ற மோதல் கைகலப்பாக முடிந்து விடுமோ என்ற அச்சம் ரசிகர்களிடமும் காணப்பட்டது.இருப்பினும் டாஸ்க் முடிந்தவுடன் இருவரும் ஒன்றாக இணைந்து விட்டனர்.
இதனைத் தொடர்ந்து இன்றைய தினம் ஏடிகே மற்றும ஜனனிக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. அதாவது ஜனனி, ஏடிகேவை தனது சகோதரி மாதிரி நினைத்து பேசினேன். ஆனால் அவர் என்னை நாமினேட் செய்து விட்டதாக வருத்தம் தெரிவித்திருந்து பெரிய சண்டை போட்டார்.
இது ஒரு புறம் இருக்க அசீம் தற்பொழுது கொஞ்சம் அடங்கிப்போயுள்ளார்.இந்த நிலையில் அவர் தன்னுடைய மைக்கை சரியாக போட திண்டாடுகின்றார். ஒரு மாதிரி பின்பக்கமாக மைஃக்கை போட்டு விட அதனை பிக்பாஸ் நல்லா இருக்கு என்று சொல்லி கலாய்த்து விட்டார். இது குறித்த வீடியோ ஒன்றினை மீம்ஸ் செய்து நெட்டிசன்கள் வெளியிட்டுள்ளதைக் காணலாம்.
Listen News!