• Sep 21 2024

இந்த தலைமுறை மாணவர்கள் தோல்வியை ஏற்க முடியாதவர்களாக மாறிவிட்டார்கள்- எச்சரிக்கை விடுத்த விக்ரம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

வருகின்ற ஆகஸ்ட் 31ம் திகதி பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாகவுள்ள திரைப்படம் தான் கோப்ரா. இயக்குநர் அஜய் ஞானமுத்துவின் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்திருப்பதோடு கேஜி எப் திரைப்பட நடிகை ஸ்ரீ நிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார்.

அந்த வகையில் தற்பொழுது இப்படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகின்றது. இன்றைய தினம் திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் உள்ள ஒரு கல்லூரியில் புரமோஷன் நிகழ்ச்சி இடம் பெற்றது.இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய விக்ரம் கூறும்போது, இந்த கோப்ரா படத்தின் பெரிய பலம் அதன் இயக்குநர் அஜய் தான். அவர் ஏற்கனவே எடுத்த படங்களை விட கோப்ரா திரைப்படம் வித்தியாசமானதாக இருக்கும். 


சினிமா என்றாலே எனக்கு பைத்தியம். எனவே தான் இதில் கடுமையாக உழைக்கிறேன். ரசிகர்கள் எங்களை சூழ்ந்து போட்டோ, ஆட்டோகிராஃப்சினிமா என்றாலே எனக்கு பைத்தியம். எனவே தான் இதில் கடுமையாக உழைக்கிறேன். ரசிகர்கள் எங்களை சூழ்ந்து போட்டோ, ஆட்டோகிராஃப் வாங்க வருவது எங்களுக்கு எந்த வகையிலும் தொந்தரவு கிடையாது. பள்ளி,கல்லூரி மாணவர்கள் தற்கொலை செய்வது பற்றி கேட்ட கேள்விக்கு, நான் பல தோல்விகளை சந்தித்து விட்டு தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன். ஆனால் இந்த தலைமுறை மாணவர்கள் தோல்வியை ஏற்க முடியாதவர்களாக மாறிவிட்டார்கள். 

மாணவர்களுக்கு ஏற்படும் மனரீதியான பிரச்சினைகளுக்கு தற்கொலை தீர்வாகாது. உங்களுக்கு எதில் ஆர்வம் உள்ளதோ? அதை உறுதியாக செய்ய வேண்டும். உங்களுக்கு என்ன ஆக வேண்டுமோ அதை தீர்மானித்து முடிவு செய்யுங்கள் அதை தேர்ந்தெடுத்து அதில் வெற்றி பெறுங்கள். கீழே விழுந்தால் கூட எழுந்து ஓட வேண்டும் என்றார். மேலும் பொன்னியின் செல்வன் திரைப்படம் நாம் பெருமைப்படும் வகையில் இருக்கும். அந்த படத்தில் நானும் இருப்பது எனக்கு பெரிய பெருமை என்றும் கூறியிருந்தார்.



Advertisement

Advertisement