தமிழ் சினிமாவில் இயக்குநர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான அஞ்சலி திரைப்படம் இன்றளவும் பலராலும் மறக்க முடியாத திரைப்படங்களில் ஒன்று.
1990 ஆம் ஆண்டு வெளியான அந்த திரைப்படம் இந்தியாவிலிருந்து ஆஸ்கார் விழாவிற்கு பரிந்துரைக்க தேர்வு செய்யப்பட்டது. அந்தத் திரைப்படத்தில் அர்ஜுன் என்ற சின்ன பையன் கேரக்டரில் ஒரு சிறுவனாக நடித்தவர் தான் நடிகர் தருண்.
தன்னுடைய 11 வயதில் அஞ்சலி படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை அவர் பெற்றார். அதன் பிறகு 2000 ஆம் ஆண்டு ஹீரோவாக தெலுங்கு மொழியில் அறிமுகமானார். மேலும் தமிழில் புன்னகை தேசம்,எனக்கு 20 உனக்கு 18 மற்றும் காதல் சுகமானது உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது 36 வயதாகும் இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தில் ரசிகர்களை கவரும் தோற்றத்திலிருந்து தருண் தற்போது உடல் எடையை கூட்டி ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார்.
இந்நிலையில் தருண் தனது அம்மா, அப்பா மற்றும் தங்கையுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகிய வருகிறது.
Listen News!