வாரிசு படத்தின் பிரஸ் ஷோவினை நேற்று இரவு பார்த்து ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்துள்ளார் முதல் நாளே விஜய் ரசிகர்களை புலம்ப வைத்து விட்டாரே ப்ளூ சட்டை மாறன் என ட்ரோல்கள் பறக்கின்றன.
பீஸ்ட் படமே பரவாயில்லைப்பான்னு ப்ளூ சட்டை மாறன் சொல்லும் காட்சிகள் எல்லாம் வாரிசு படத்தை பார்த்து விட்டு அழாத விஜய் ரசிகர்கள் கூட கதறி அழுது விடுவார்கள் அந்த அளவுக்கு துவைத்து கழுவி ஊற்றியுள்ளார்.
வாரிசு படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனம் கொடுக்கவும் அஜித்தின் துணிவு படத்துக்கு நெகட்டிவ் விமர்சனம் கொடுக்கவும் ப்ளூ சட்டை மாறனுக்கு ஒரு கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதாக ரூமர்கள் கிளம்பின. அதற்கு பழிவாங்கவே மனுஷன் இந்த முறை மொத்த வன்மத்தையும்கொட்டி உள்ளார் என விமர்சனத்தை பார்த்து ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
சென்டிமெண்ட் படம்னு சொன்னாங்க ஆனால், ஒரு இடத்தில் கூட எமோஷனலாக படம் கனெக்ட் ஆகவில்லை என்றும் முதல் பந்திலேயே ஆட்ட நாயகனை டக் அவுட் ஆக்கி உள்ளார் ப்ளூ சட்டை மாறன்.
இரண்டாம் பாதியிலாவது படம் சூடு பிடிக்கும் என்று பார்த்தால் அங்கேயும் படம் சூடு பிடிக்கவில்லை. சிஏ படித்தவர்களுக்கே புரியாத அளவுக்கு சேர்மேன், பிசினஸ் பற்றிய கிளாஸ் எடுத்து இருக்கிறார் வம்சி. வில்லன் பிரகாஷ் ராஜ் மொக்கை வில்லனாக மாறிவிட்டார். அதிலும், அந்த கிளைமேக்ஸ் காட்சியில் பிரகாஷ் ராஜிடம் பேசி விஜய் திருத்தும் காட்சிகளில் இனிமேல் வில்லனாகவே நடிக்க மாட்டேன் என்கிற அளவுக்கு புத்தராகவே மாறிவிட்டார் பிரகாஷ் ராஜ் என ப்ளூ சட்டை மாறன் கூறி உள்ளார்.
வாரிசு படத்தை சீரியல் என ட்ரெய்லரை பார்த்ததுமே ரசிகர்கள் ட்ரோல் செய்தனர். சீரியலிலும் சீரியல் இது இந்தி சீரியல் என கழுவி ஊற்றி உள்ளார். வீட்டின் காட்சிகளுக்கு கூட VFX போட்டு சொதப்பி உள்ளனர். எம்ஜிஆரின் மாட்டுக்கார வேலன் படத்திலேயே தொழில்நுட்பத்தை அழகாக கையாண்டு இருப்பார்கள் என ப்ளூ சட்டை மாறன் எம்ஜிஆரை வைத்தே விஜய் படத்துக்கு பஞ்ச் கொடுத்துள்ளார்.
பீஸ்ட் படத்திலாவது சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பாடல்களும் விஜய்யின் நடனமும் இருந்தது. ஆனால், இந்த படத்தில் அதுவும் இல்லை. நாயகி ராஷ்மிகா மந்தனா எதுக்கு இந்த படத்தில் இருக்கிறார் என்று தெரியாத அளவுக்கு வழக்கம் போல டெம்பிளேட் ஹீரோயினாகவே மாறிவிட்டார் என சந்தோஷத்தில் இருந்த விஜய் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தி உள்ளார்.
வாரிசு படத்திற்கு முழுக்க முழுக்க நெகட்டிவ் விமர்சனம் கொடுத்துள்ள இவரை கெட்ட வார்த்தையில் கமெண்ட் பக்கத்தில் விஜய் ரசிகர்கள் திட்டி வருகின்றனர்.
ப்ளூ சட்டை மாறன் கமர்ஷியல் படங்கள் என்றாலே இப்படித்தான் சொல்வார், அதையெல்லாம் கண்டுக்காதீங்க போய் படத்தை பார்த்து என்ஜாய் பண்ணுங்க என்ற கமெண்ட்டுகள் குவிந்த வண்ணம் இருந்தன.
Listen News!