• Sep 21 2024

'இது வழக்கமான கதை தானே வேற கதை கொண்டு வாருங்கள்'- லோகேஷின் திரைப்படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகர்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக வெற்றி இயக்குநராக வலம் வருபவர் தான் லோகேஷ் கனகராஜ். மாநகரம் என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிய இவர் இதனைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படத்தை இயக்கினார். இப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.

இதனால் தளபதி விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கியிருந்தார். இப்படமும் வசூலில் அள்ளிக் குவித்ததைத் தொடர்ந்து தற்பொழுது உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படமானது நாளை மறுநாள் ரிலீஸ் ஆக இருக்கின்றது.

இதனால் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் லோகேஷ் மற்றும் குழுவினர் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விக்ரம் படத்தின் கிளைமாக்சில் சூர்யா வருகிறார் என்பதும் அவர் விக்ரம் 3ல் நடிக்கப்போகிறார் என்பதும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் தெலுங்கு நடிகர் பிரபாஸ் உடன் கூட்டணி சேர பேச்சுவார்த்தைக்கு சென்றதாக தெரிகிறது. லோகேஷிடம் முழு கதையையும் கேட்ட பிரபாஸ், இது வழக்கமான கதை தானே, வேறு ஏதாவது பிரமாண்டமான கதை இருந்தால் கொண்டு வாருங்கள் என கூறி அனுப்பி வைத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement